தயவு செய்து இந்த படத்தையும் உங்க கமன்டையும் நீக்குங்கள் இல்லனா. உங்க வீட்டுக்கு போலிஸ் வருவதற்கு வாய்ப்புக்கள் உள்ளது. பாலா இந்த பிரச்சனையை போலிசுக்கு கொண்டு போகலானாலும் இதை குழந்தைகளுக்கான அமைப்புகள் கையில் எடுக்கும். இந்தியாவுல குழந்தைகள் பாதுகாப்பு சட்டம்னு ஒன்னு இறுக்கு தெரியுமா? பெத்தவங்க இப்படி குழந்தை படத்தை போட்டு அதை abuse பண்னா கூட சட்டம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். அந்த குழந்தையின் பெற்றோர்கள் அனுமதி இல்லாமல் அதை பிரசுரிப்பதே தவறு. அதிலும் அந்த குழந்தையையும் அதன் அப்பாவையும் abuse பண்ண அதை பிரசுரிப்பது கிரிமினல் குற்றம். உங்களுக்கு பாலாவுக்கும் பிரச்சனைன்னா அவரை தாக்கி பேசுங்கள். தேவை இல்லாமல் குழந்தையை வம்புக்கு இழுக்க வேண்டாம். அதுக்கு உங்க ரமசாமியையும் தெரியாது ராமனையும் தெரியாது கிருஷ்ணனையும் தெரியாது. பாலா அந்த குழந்தைக்கு தகப்பன் அதுக்கு "@@@@@" ன்னு கூட பெயர் வைப்பார். யாரோ பெத்த குழந்தைக்கு நீங்க எதுக்கு பெயர் வைக்க ஆசை படுறீங்க. நம்ம வீட்டு குழந்தை படத்தை பிரசுரிக்கவே யோசிப்போம். அடுத்த வீட்டு குழந்தையின் படத்தை இப்படி உங்கள் வெறுப்பு கலந்த சண்டைக்கு பயன்படுத்த வேண்டாம். உங்களுக்கு ஒரு பத்து பதினைந்து பேரு லைக்கு வேறு போட்டு இருக்காங்க அவுங்க வீட்டில் எல்லாம் குழந்தைகளே கிடையாதா? தயவு செய்து அந்த குழந்த கிட்ட மன்னிப்பு கேளுங்க அதுக்கு நீங்க எல்லாம் என்ன பேசிட்டு இருக்கீங்கன்னு கூட தெரியாது. "செல்லமே நீ முட்டாள்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாய்."
No comments:
Post a Comment