Monday, September 24, 2012

ராமசாமிக்கு தடி எடுக்கறவங்களுக்கு ஒரு முக்கிய கண்டிஷன் உடனே நீங்க எல்லாம் தாலி அறுக்கனும். நான் சொல்லல சாமி நம்ம நாத்திக குழந்தைகள் சொல்லுறாங்க. புதுசா கல்யாணம் ஆக போறவங்க என்ன பண்ணுவாங்க. தாலி கட்டிக்காத தமிழ் பொண்ணு கிடைப்பங்களா? ரொம்ப ரொம்ப கஷ்டம். திருமணம் ஆகாத நம்ம புள்ளைங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இந்த  நாத்திக நாரவாயன்கள் பின்னால போனா அம்பது வயசானாலும் உங்களுக்கு கல்யாணம் ஆகாது. கொஞ்சம் பிராக்டிகலா திங்க் பண்ணுங்க. நம்ம பொண்ணுங்க எல்லாம் இன்னும் தாலி எனும் தொல்காப்பிய தமிழ் கலாச்சாரத்துலதான் இருக்காங்க. தாலி கட்டாம நீங்க கல்யாணம் பணிக்கனும்னு முடிவு பண்னா,  நம்ம பொண்ணுங்க இப்ப ஒத்துக்குவாங்களான்னு யோசிங்க. நாம்  மார்க்கிசிய ராமசாமி தடிகள் மாதிரி விரக்தியான தத்துவத்தில் தாலி அறுத்து புரட்சி பண்ணுறவங்க ஆல்ல. நம்ப புள்ளைகளுக்கு கொஞ்ச நேரம் கொடுங்க. அவுங்க மாறி எனக்கு தாலி வேணாம்னு சொல்லும் காலம் வரும். அதுதான் நமது பெண்களின் உண்மையான் விடுதலை. நீங்க நாத்தீக நாரவாயன் தத்துவத்தை கேட்டுட்டு உங்கள் கொள்கைகளை அவர்கள் மீது  திணித்து புரட்சி பண்ணாதீர்கள். நீங்கள் அதிஷ்டசாலிகள் எனில் நம் சமூகத்தில் தற்போது பல பென்கள் அண்ணலின் வழியில் தம்மத்தை ஏற்று சடங்கு சம்பிரதாயங்களில் இருந்து விடுதலை பெற்று தாலி நமது பூர்வீக சாக்கிய கலாச்சாரம் இல்லை என உணர்ந்து வருகிறார்கள். அது போன்ற நம் குல பெண்களை நான் மகாராஷ்ட்ராவில் சந்தித்து உள்ளேன். தமிழ் நாட்டில் அந்த மனமாற்றம் இன்னும் வரவில்லை. தாலி கட்டமாட்டேன்னு அடம் பிடித்தால் நாத்தீகம் அல்லது மார்சியம் பேசும் ஒரு frustrated பொண்ண கல்யாணம் முடிச்சி காலம் எல்லாம் கஷ்டப்படுவீங்க. கொஞ்சம் யோசித்து முடிவு பண்ணுங்க. புத்த தம்ம முறை படி திருமணம் செய்த சில சாக்கிய இளைஞர்கள் தாலி கட்ட விருப்பம் இல்லை இருப்பினும் அவர்கள் திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்காகவும் அவர்களது குடும்பத்துக்க்காகவும் தாலி கட்டுகிறார்கள். சில சாக்கிய இளைஞர்கள் தம்மத்தில் முழுமையான ஈடு பாடு இருப்பினும் வீட்டில் மறுக்க முடியாமல் இந்து முறைபடி அல்லது கிறிஸ்துவ முறைபடி திருமணம். இதுதான் இன்றைய தலித் வாழ்வியல். நாம் நாத்தீக கூட்டம் போல தனி மனிதர்கள் அல்ல வீம்புக்கு தாலி அறுக்கும் கூட்டம் அல்ல நமக்கு சமூகம் குடும்பம் உள்ளது.  நமது புரட்சி என்பது தாலி அறுத்து பண்ணும் நாத்தீக புரட்சி அல்ல அது மனமாற்ற புரட்சி....பொறுமையா தான் ஏற்படும்.....








  

No comments: