Friday, September 28, 2012

பாலி பாஷை - பண்டிதர் அயோத்தி தாசர்

பாலி பாஷை - பண்டிதர் அயோத்தி தாசர்

மகடபாஷையாம் பாலியினின்றே பதினெட்டு பாஷைகள் தோன்றியுள்ளது. அவை மகதம், கோசலம், மராட்டியம், கொங்கணம், சிந்து, சோனகம், திராவிடம், சிங்கள, அங்கம்,  வங்கம், கலிங்கம், கவுசிகம், துளுவம், சரவகம், சிநங், கம்போலு, மருனம், பப்பிர,  பதிநென்பாடையாம்.

பாலி  பாஷையாம் மகடத்தினின்றே சகலபாஷைகள் தோன்றிய ஆதாரத்தால் திராவிட பாஷையாம் தமிழ் மொழிகள் பல பாஷையிலும் கலப்புற்றிருக்கின்றது.

கர்னல் சைக்ஸ் என்னும் சரித்திரக்காரன் சீனர்களுடைய (ரிக்கார்டுகளை) அதாரமாகக் கொண்டு புத்தர்களுடைய தம்மங்களுக்கு முன்பு பிராமணர்களுடைய சரித்திரங்கள் யாதொன்றும் கிடையாதென்று வரைந்திருக்கிறார்.  பிஷப்மினுஸ் என்பவர் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு யாத்திரையாக வந்த காலத்தில் இந்தியா முழுவதும் புத்த தம்மம் பரவியிருந்ததாகக்   கூருகின்றாரன்றி ஹிந்து பிராமணர்கள் கூட்டமேனும் இவர்கள் சரித்திரங்களேனும் இருந்ததாக கூறவில்லை.


சீன யாத்திரைக்காரர் பாஹியான் என்பவர் இந்தியாவிற்கு வந்து புத்தருடைய தம்மங்கள் யாவையும் பாலி பாஷையிலேயே எழுதிக்கொண்டு போனதாக கர்னல் சைக்ஸ் கூறுகின்றார்.

உலக சீர்திருத்தத்திற்க்காக உழைத்தவர்களின் அஸ்திகளின் பேரில் கட்டிடங்கள் கட்டியிருப்பது பழைய தொகுப்புகளில் காணப்படுகிறதன்றி பிராமண குருக்களை பற்றியேனும், அவர்கள் சரித்திரங்களை பற்றியேனும் ஒன்றும் அகப்படவில்லை.

இத்தகைய சரித்திர ஆதரங்களால் புத்தபிரானுக்கு முன்பு ஆரியர்களேனும் பிராமணரென்று சொல்லித் திரியும் கூட்டத்தோரேனும் அவர்களது வேத உபநிடதங்களேனும் அவர்கள் ஜாதிகளேனும் இருந்தது கிடையாது. ஆதாரங்கள் இன்னும் வேண்டுமேல் பின்னும் எழுத காத்திருக்கிறோம்.





  





No comments: