மாட்டிறைச்சி உண்பது என்பது தலித் வாழ்வியலில் அங்கமாக இருப்பது உண்மைதான். அண்ணலின் தீண்டத்தகாதார் யார் எனும் புத்தகத்தை நான் ஒரு அம்பது முறையாவது வாசித்து இருப்பேன். மாட்டிறைச்சி எப்படி பூர்வ புத்த குடிகள் மீது திணிக்கப்பட்டது என்பதே அவர் வாதம். மாடு இறந்த பின்னர் அதை உரித்து பறை செய்து அடிக்கலாம். மாடு இறந்த பின்னர் அதை உண்ணலாம். இதைதான் நமது பூர்வ குடிகள் செய்தார்கள். நாம் மாட்டு இறைச்சி சாப்பிட்டதால் மட்டும் தீண்ட தகாதவர் அல்ல, நாம் பூர்வ புத்த குடி என்பதாலேயே தீண்டதகாதவர் என்பதே அண்ணலின் வாதம். செத்த மாட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தோம் என்கிறார். நாம் இங்கு அரசியல் செய்கிறோமா இல்லை. நம் மீது திணிக்கப்பட்ட ஒரு உணவு கலாச்சாரத்தை அப்படியே ஏற்றுக்கொல்கிறோமா என்பதே வாதம். பலி யாகம் செய்து அனைத்து உயிர்களையும் கொன்று தின்ன கூட்டம் இன்று தங்களை அஹிம்சாவாதிகள் என்று காட்டிக்கொள்வதும் மாட்டிறைச்சி பூர்வீக புத்த குடிகள் மீது திநிக்கப்பட்டு அவர்கள் கொலை வெறியர்களாக கட்டப்படுவதுமே அரசியல். உலக உயிர்களிடத்தில் எல்லாம் கருணை காட்டிய சாக்கிய குல மக்கள் கொலைகாரர்களாக குடிகாரர்களாக விபச்சார தொழில் செய்பவர்களாக முத்திரை குத்தப்பட்டுள்ளனர். பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி மட்டும் அல்ல அணைத்து இறைசிகளையும் விட்டு விட்டு வெஜிடேரியன் ஆனதற்கு கரணம் கொல்லாமை பேசிய சாக்கிய குடிகளை விட தங்கள்ளை உயர்ந்தவர்கள் என காட்டிக்கொள்ளவே என்கிறார் அண்ணல். மாட்டிறைச்சி என்பது ஆரிய இந்துக்களின் கலாச்சாரம் அது பூர்வ புத்த குடிகளின் மீது திணிக்கபட்டது எனும் உண்மை வரலாற்றை எடுத்து சொல்லி நம் மக்களை மீண்டும் புத்தத்துக்கு எடுத்து செல்வது நமது அரசியலா? அல்லது நம் மீது திணிக்கப்பட்ட இந்த மாட்டிறைச்சி, டாஸ் மார்க், செத்த மாட்டை தூக்குவது, மனித மலத்தை நேம் அள்ளுவது, சாவுக்கு பறை அடிப்பது விபச்சாரம் என வாழ்வதா. செத்தமாட்டை சாப்பிடுவது தப்பில்லை மாடுகளை கொன்று அதன் இறைச்சியை சாப்பிடுவதில் கொல்லாமை எனும் பஞ்ச சீலம் தொடர்பு படுத்தப்படுகிறது. அண்ணல் காட்டிய வழியில் கொல்லாமையை கடை பிடிக்கும் நாம் மாட்டிறைச்சிக்கு விழா எடுப்பதா என்பதே இங்கு எழுப்படும் கேள்வி. நாம் கருணையை உலகிற்கு சொல்லிய குலத்தில் தோன்றியவர்கள். தன ஊனை வளர்க்க பிற ஊனை தின்பவர்களிடம் அருள் (மெத்தா) எங்கு இருக்கும் என கேட்ட வள்ளுவனின் வழி தோன்றல்கள். கொலைகார கூட்டம் தங்களை அஹிம்சா வாதிகள் போல கட்டிக்கொள்கிறது. நாம் கருணையற்ற கொலை வெறியர்கள் போல மாட்டிறைச்சி விழா நடத்திக்கொண்டு இருக்கிறோம்.
No comments:
Post a Comment