Thursday, September 6, 2012

இவுங்க அண்ணலையே விமர்சனம் பண்ணுவாங்களாம். அந்த அளவுக்கு அறிவு நிறைந்தவர்காளாம் அவரை விட செயற்கரிய சாதனைகளை எல்லாம் இவுங்க அண்ணன் செய்துட்டாராம். அதனால இவுங்களுக்கு அண்ணனையும் மேதகு டேசிய புலி கூட்ட தலைவரையும் தான் தெரியுமாம். அண்ணல் டமில்  டேசியத்துக்கு எதிரானவராம்  இந்துத்துவ இந்தியாவை ஆதரித்தாராம். அவருக்கு இன தேசிய அறிவும் உணர்வும் இல்லையாம். அதெல்லாம் அறிந்த வீர தீர மகா புலிதான் நம்ம சிறுத்தை உருவில் மறைந்து இருக்கும் நம்ம  டமில் தேசிய மகா புளியாம். நம்ம சமூகத்தை, சமூக மக்களை மண்ணாக்கிட்டு இவுங்க போயிடுவாங்கலாம் நாம கைய கட்டி வாய பொத்தி பாத்துக்கிட்டு இருக்கனுமாம். அவர் சம கால தலைவராம் நம்ம ரத்தமாம்.

நான் சம காலத்து தலைவரை தான் விமர்சிக்கிறேன் அது அவசியம் கூட. அண்ணன் இதுக்கு முன்ன இருந்த தலைவர்கள் எல்லாம் எந்த மரத்தையும் புடுங்கி நடவில்லை. நான்தான் எல்லா மரத்தையும் புடுங்கி புடுங்கி நட்டுகொண்டு இருக்கிறேன், எனக்கு எந்த தலித் தலைவரை  பற்றியும் அவர்கள் கொள்கைகளும் தெரியாது ராமசாமியும் பிரபாகரனும் தான் எனக்கு தெரியும்.  புலி கூட்டத்தை பார்த்துதான் சிறுத்தை கூட்டத்தை அமைத்தேன்னு சொல்லிட்டு திரிகிராரே அதெல்லாம் உங்களுக்கு தலித் தலைவர்களை  விமர்சிப்பதாக தெரியவில்லையா?

அவரும் அவரது எடுப்புகளும் மேடைக்கு மேடை சிறு சிறு குழுக்களாக  உள்ள அம்பேத்கர் இயக்க அமைப்புக்களை கொச்சை படுத்தவில்லையா? அவர்கள் எல்லாம் சிறு சிறு குழுக்கள் தான் அவர்களை உயரத்தில் தூக்கி உக்கார வைக்க பண்ணைகளோ பெரும் முதலாளிகளோ இல்லை. விளம்பரத்திற்காக கொள்கையை விற்று கூட்டம் சேர்க்கும் ஆட்கள் இல்லை. அவர்கள் எல்லாம் சமூகத்தை விடுவிக்க போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களால் ஆளுயர பேனரும் போஸ்டரும் வைக்க முடியாது ஆனால் அடி மட்ட தொண்டர்களாக இயக்க ஆணிவேர்களாக வாழ்ந்து செத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சென்னை சேரியில் சின்ன குடிசையில் வாழ்ந்து வந்த பவுத்தபெரியாரை நான் சந்தித்தபோது அவருக்கு டி குடிக்க கூட காசு இல்லை. நான் சின்ன பையன் அவருக்கு டி வாங்கி கொடுத்தேன். தலித் தலைவர்ணா டீக்கு கூட காசு இல்லாமல் பிச்சை எடுக்க வேண்டும் என நான் சொல்லவில்லை. அப்படி எல்லாம் தன்னை விளம்பர படுத்திக்கொல்லாமல் பணம் சேர்த்துக்கொள்ளாமல் காரு பங்கலான்னு  வாழாமல் செத்தவர்களை வாழதெரியாதவர்க்கள். இயக்கம் கட்ட தெரியாதவர்கள் என்று கொச்சை படுத்தாதீர்கள் என்கிறேன். அவர்கள் போட்ட பிச்சை அவர்கள் நடத்திய போராட்டம் அவர்கள் நடத்திய மறியல் அவர்கள் நிரப்பிய சிறை இதுதான் நம்மை  வாழ  வைத்துக்கொண்டு இருக்கிறது. ராமசாமியோ பிரபாகரனோ நம்மை வாழ வைக்கவில்லை. இன்று டமில் டேசியத்தை மீறிய ஒரு தலித்திய கோட்பாடும், தமிழ் தேசிய அரசியலை  தாண்டிய  ஒரு தலித் அரசியலும் இந்த மண்ணில் வேரூன்றி இருப்பதற்கு காரணம் அவர்ககள் நடத்திய தலித் அரசியல்.

பொழுது விடிஞ்சா பொழுது போனா பிரபாகரனை பேசுவதை நிறுத்திவிட்டு நம்ம முன்னோர்களை பேசுங்கள். நாம் நடத்திய இயக்கம் நாம் நடத்திய போராட்டங்களை பேசுங்கள். நாங்கள் திருமா நடத்தும் தலித் அரசியலை கொச்சை படுத்தவில்லை. அதை அவர் முழு மூச்சாக செய்ய தயார் எனில் அதை வரவேற்போம். ஆனால் அவர் நடத்தும் தமிழ் அரசியலை தொடர்ந்து விமர்சிப்போம் எதிர்ப்போம். தமிழ் தேசிய அரசியல் என்பது தலித் மக்களுக்கு எதிரானது அதை சீமான், வை கோ, நெடுமாறன் செய்தால் எதிர்ப்போம் அதை திருமா செய்தால் அதைவிட அதிகம் எதிர்ப்போம். ஏனெனில் திருமா செய்யும்போது அது சமூகத்துக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

புத்தர் வள்ளுவர் ரவிதாஸ்  நந்தனார் சொக்கமேளர் பண்டிதர் தாத்தா அண்ணல் எம் சி ராஜா  குருசாமி அப்பாதுரை  மீனாம்பாள் சிவராஜ் இம்மானுவேல் சேகரன் சுந்தரராசனார் மூர்த்தியார் என மாமனிதர்கள் வாழ்ந்து காட்டிய பாதையே எங்கள் பாதை அதை விடுத்து  கொள்ளை கொலைகார புலி கூட்ட கும்பலை எம் மக்களின் தலையில் சுமத்தி அவர்களை கொள்ளை கொலைகார கூட்டமாக மாற்ற நினைப்பதை நிறுத்துங்கள்.







No comments: