தலித் இயக்கம் என்பது திராவிட இயக்கத்தில் இருந்து தோன்றியது அல்ல. திராவிட இயக்கம் தலித் இயக்கம் தோன்றிய அரை நூறாண்டுக்கு பின்னர் தோன்றியது. 1891 முதல் 1944 வரை பண்டிதர் தாத்தா ராவ்பகதூர ராஜா தந்தை சிவராஜ் போன்றவர்கள் சாக்கிய ஆதிதிராவிட இயக்கங்களை நடத்திய காலத்தில் தமிழகத்தில் திராவிட எனும் இயக்கம் இல்லை. தாத்தா பறையர் மகாஜன சபையை 1891 இல் தோற்று வித்தார், அதுவே பின்னால் ஆதி திராவிடர் மகாஜன சபை எனும் பெயரில் ராவ்பகதூர் ராஜா, தந்தை சிவராஜ் போன்றவர்களால் தலைமை ஏற்று நடத்தப்பட்டது. அதுவே பின்நாள் அகில இந்திய அளவில் டிப்ரஸ்ட்டு கிளாஸ் அமைப்பாக உருவானது. அதுவே பின்னர் ஷேடுல்ட்டு இன அமைப்பாக மாறியது. பார்பணரல்லாதோர் அமைப்பான நீதி கட்சி 1916 இல் தொடங்கப்பட்டது. ராமசாமியால் சுயமரியாதை கட்சி 1925 இல் தொடங்கப்பட்டது. இரண்டும் 1938 இல் இணைக்கப்பட்டது. அதுவே பின்னர் 1944 இல் திராவிடர் கழகமாக உருவானது. நீதி கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிட கழகம் உருவாவதற்கு முன்னரே தலித் இயக்கம் மிகவும் பலம் வாய்ந்த இயக்கமாக இருந்தது என்பது வரலாறு. ஆதி திராவிடர் என்பது ராமசாமி தந்த அடியாளம் இல்லை. ராமசாமி திராவிடம் பேசாமல் காங்கிரசில் காந்திக்கும் கோபாலுக்கும் ஜாலரா அடிச்ச காலத்திலேயே தலித்துக்கள் தங்களுடைய அடையாளமாக் ஏற்ற ஒன்று. திராவிட அரசியல் உருவாவதற்கு முன்னரே ஆதி திராவிட அரசியல் இருந்தது என்பதே வரலாறு. சொல்லப்போனால் திராவிடர் கழகம் உருவானபோதும் அதன் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் உருவானபோது. நம்மிடையே இருந்த நிறைய ஜால்ரா கூட்டங்கள் பதவிக்காக அங்கு ஓடியதே வரலாறு. திராவிட இயக்கத்துக்கு பின்னர் தலித் இயக்கம் எழுச்சி பெறவில்லை அதற்க்கு முன்னால் இருந்த வீரியத்தை அது இழந்தது. தன்னுடைய அடையாளத்தை இழந்து தமிழன், திராவிடன் எனும் மாயைக்குள் தலித் இயக்கத்தையும் தலித் மக்களையும் கொண்டு சென்றது. நம்முடைய அரசியல் என்பது நாம் இந்துக்களின் (ஆரிய திராவிட) அங்கம் இல்லை என்பதை உணர்ந்து நாம இந்திய அரசியலில் சுயமான் அங்கம் என்பதை நிலை நிருத்தி நமக்கான உரிமைகளை வென்று எடுப்பதே. நாம் தான் உண்மையான் இந்துக்கள் நாம் தான் உண்மையான் தமிழர்கள் நாம் தான் உண்மையான திராவிடர்கள் என்பது நம்மை மீண்டும் மீண்டும் குழப்பத்தில் கொண்டு விடும். நாம் நமக்கான அடையாளத்தில் நமக்கான உரிமைகளுக்கு குரல் கொடுப்பதே உண்மையான தலித் அரசியல்..
தலித் அரசியல் என்பது இந்து அல்லாதோர், தமிழர் அல்லாதோர், திராவிடர் ஆல்லாதோர் எனும் முழுமையான் தலித் இயக்கத்தால் நடத்தப்பட்டு வருகிறது.
"The basis of my politics lies in the proposition that the Untouchables are not a sub-division or sub-section of Hindus, and that they are a separate and distinct element in the national life of India." D.B.R. Ambedkar
No comments:
Post a Comment