சாக்கிய சமூகத்தில் பிறந்த மிகப்பெரிய அறிஞர் தலித் விடுதலை இயக்கத்தின் முன்னோடி தமிழகத்தில் பகுத்தறி இயக்கத்தை தோற்றுவித்தவர் தனது வாழ்நாள் முழுவதும் சமத்துவத்தை ஏற்படுத்த அயராது உழைத்த மாமேதை பண்டிதர் அயோத்தி தாசர் அவரை எந்த அளவுக்கு அசிங்கமாக எழுத முடியுமா அந்த அளவுக்கு அசிங்க படுத்தியது கொச்சை படுத்தியது தான் இந்த சூத்திர முரசு. இன்னைக்கு தலித் மக்களிடம் பணம் வசூலிக்க அண்ணலையும் புத்தரையும் முதன்மை படுத்துகிறது. அயோத்தி தாசரை கொச்சை படுத்திய சூத்திர முரசுக்கு எந்த மானமுள்ள பறையனும் நிதி உதவி செய்ய மாட்டான். குறைந்த பட்சம் சூத்திர முரசு, தான் செய்தது தவறு என்று வருத்தம் தெரிவிக்க வேண்டும். அந்த பத்திரிக்கை உண்மையில் தலித் மக்களுக்காக போராடுகிறது எனில் பறையர் சக்கிலியர் மக்களிடம் ஒற்றுமையை ஏற்ப்படுத்த முயல் கிறது எனில் பண்டிதர் சக்கிலிய மக்களை பற்றி சொன்ன விஷயங்களையும் பறையர் மற்றும் சக்கிலியர் மக்களுக்கு இடையே உள்ள உறவுகளை பற்றி அவர் பேசிய விஷயங்களையும் அது வெளியிட்டு முன்னர் போட்ட பதிவு தவறான புரிதல் என்று வருத்தமாவது தெரிவிக்க வேண்டும்.
No comments:
Post a Comment