இந்திய அரசியலில் சாக்கியர்கள் தனித்தன்மை உடையவர்கள் அவர்கள் ஒட்டுமொத்த இந்தியா என்பதின் அங்கமோ பகுதியோ இல்லை என்று போராடி பெற்ற உரிமைகள்தான் நம்மை இன்று வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது வளர்த்து கொண்டு இருக்கிறது. பாராளுமன்ற அரசியலில் இதை நாம் பேசுவது எவ்வளவு அவசியமோ அதை விட அதிக அவசியம் மாநில அளவிலான அரசியலில் இதை நாம் பேசுவதும். மாநில அரசியலில் நாம் அங்கமோ பகுதியோ இல்லை. திராவிட அரசியலிலும் தமிழ் தேசிய அரசியலிலும் நாம் நம்முடைய தனித்தன்மையை பாது காப்பது அவசியம். புத்தம் சரணம் கச்சாமின்னு சொல்லுறது சும்மா புத்தர்கிட்ட வரம் வாங்க அல்ல. அது நாம் நம்மை இந்துக்கள் தமிழர்கள் திராவிடர்கள் இடத்தில் இருந்து பிரித்து தனியாக காட்டும் அடையாளம். "புத்தம் மதம் இல்லை" அது மார்க்கம் எனும் பெயரில் ஜாதி இந்துக்கள் நமது அடையாளத்தை ஒழிக்க பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள். நம்மில் பலர் ஜாதி இந்துக்களின் அரசியலை புரிந்து கொள்ளாமல். புத்தம் மதம் அல்ல மார்க்கம் எனும் பெயரில் சாக்கியர் எனும் தனி அடையாளத்தை விட்டு விட்டு இன்னும் இந்து கூடாரத்திற்குள் இருந்து கொண்டு கார சேவை செய்து வருகின்றனர். புத்தம் வெறும் தனி மணித விடுதலைக்கான மார்க்கம் மட்டும் அல்ல அது அடையாள அரசியலுக்கான மார்க்கமும் கூட. அரசியலில் அடையளம் மிகவும் முக்கியம். நாம் நமது தனித்துவ அடையாளத்தை இழந்தோம் எனில் பெற்ற உரிமைகளை விட்டு விட்டு நாங்கள் ஒடுக்கப்பட்டவர்கள் நசுக்கப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் எங்களுக்கு பாத்து கொஞ்சம் தருமம் பண்ணுங்க சாமியோன்னு பிச்சை எடுக்க வேண்டியதுதான்......
No comments:
Post a Comment