ஒருத்தர் கேக்குராறு என்னால் திருமா சேர்த்தது போல ஒரு பத்து பேரை சேக்க முடியுமான்னு. ஏம்பா முடியாதவங்க யாரும் கேள்வி கேட்க கூடாதா? ஆப்புறம் எதுக்கு ஜனநாயகம் மனித உரிமை பேசுறீங்க? பாமரனுக்கும் கடைசி மனிதனுக்கும் கேள்வி கேட்க உரிமை உண்டுன்னு சொல்ரீங்களே? கேட்டு சொல்லுங்க நீங்க டளிவருங்க எங்க பெயரை சொல்லி என்ன வேணும்னாலும் செய்வீங்க நாங்க கம்முனு இருக்கனுமா? இவ்வளவு நாள் ஆண்டிகள் எங்கள் வாய இப்படி தான் அடச்சாங்க இப்ப நீங்க அடைக்கிரீங்க்களா? தலிவரா ஆனா மட்டும் போதாது தன்னை நாடி வரும் கூட்டத்தை நல் வழி படுத்தனும். அவுங்களுக்கு சரியான பாதையை காட்டனும். ஒரு தகப்பனுக்கு நாலு அஞ்சு குழந்தை தான் ஆனா ஒரு தலைவனுக்கு ஒரு தகப்பனை விட அதிக கடமைகள். அண்ணல் செத்து அறுபது வருடம் ஆக போகுது. அவர் இல்லை என்றாலும் அவர் காட்டிய தம்மம் நம்மை வழி நடத்துது. அண்ணன் காட்டும் பிரபாகரனும் துப்பாக்கியும் நம்மை வழி நடத்தாது. சுடுகாட்டுக்கு அனுப்பி விடும். இப்பதான் இந்த சமூகம் வளர ஆரம்பித்து உள்ளது. அவர்களை கிரிமினல்களாக்கி ஜெயிலுக்கு அனுப்பிடாதீங்க. எண்பதுகளில் தொன்னூறுகளில் சட்டை பாக்கெட்டில் அண்ணல் படம் போட்ட பேனாவை குத்திக்கிட்டு கல்லூரி வாசல்களில் அலைந்த கூட்டம், இப்ப பிரபாகரை குத்திக்கொண்டு சாராய கடைக்கு போய்க்கொண்டு இருக்கிறது. தொண்டர்களை நெறி படுத்துங்க. தம்மம் முகவும் முக்கியம். தம்மம் இல்லாத அரசியல் சாக்கடையில் மீன் பிடிப்பது போல.
No comments:
Post a Comment