தாத்தா இரட்டைமலை சீனிவாசன் பறையர்களுக்கு மட்டும் உழைத்தாராம் அவர் மற்ற தலித் மக்களுக்கு போராட வில்லையாம். அவர் பறையர்களுக்கு மட்டும் தலைவராம். அவர் பறையர் மகாஜன சங்கம் என ஆரம்பித்தாராம் அது பறையர்களுக்கான ஜாதி சங்கமாம். பறையர் மகாஜன சங்கம்தான் பின்னால் ஆதி திராவிடர் சங்கம் ஆனது அதன் பின்னர் அகில இந்திய டிப்பிரஸ்டு கிளாசு சமாஜ் ஆனது அதன் பின்னர் அகில இந்திய ஷேடுல்ட் காஸ்ட் பெடரேஷன் ஆனது என்பது வரலாறு. அண்ணலும் தாத்தாவும் வட்ட மேஜை மாநாட்டில் அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சார்பாக கலந்து கொண்டபோது தாத்தா நான் ஒரு பறையன் என்றே அறிமுகப்படுத்தி கொண்டார் அது பறையன் எனும் ஒரு சிறு குழுவை குறிக்க அல்ல பறையன் எனும் அடையாளம் அணைத்து சாக்கிய மக்களையும் குறிக்கும் அடையாளமாக அவர் பயன்படுத்தினார். தாத்தாவை ஜாதி இந்துக்கள் பறையர் எனும் சுய சாதி பிரியர் என்று அடையலாம் காட்டுவது போலவே அண்ணல் அம்பேத்கரையும் சொன்னார்கள். காந்தி கூட அண்ணலும் தாத்தாவும் அவர்களது சமூகங்களுக்கு மட்டுமே பிரதி நிதிகளாக வந்து உள்ளனர். நானே மற்ற தலித் மக்களின் பிரதி நிதி என்று சொல்லிக்கொண்டார். அண்ணல் அம்பேத்கரை அவர்கள் சுய ஜாதி பிரியர் என சொன்ன காரணங்கள் அண்ணல் மஹார் எனும் புனை பெயரில் தான் பல ஆண்டுகள் தனது கருத்துக்களை எழுதினர், அண்ணல் ஆரம்பித்த காட்சிகளில் பெரும்பாலும் மகார்கள் மட்டுமே அதிகம் இருந்தனர், அவர் தொடர்ந்து மஹார் சமாஜத்தில் அங்கம் வகித்தார், தான் கடைசியாக மதம் மாறிய போது கூட அவர் மஹார் சமாஜத்தில் கலந்து ஆலோசித்த பின்னர் தான் மதம் மாறினார். தாத்தா பறையர் என பேசியதும் அண்ணல் மஹார் என பேசியதனால் அவர்கள் வாங்கி கொடுத்த உரிமைகள் எல்லோருக்கும் தான். அதை இட ஒதுக்கீட்டு உரிமை என சுருக்கி பார்த்தாலும், எல்லா தலிதுக்க்களும்தான் அதை அனுபவிக்கிறார்கள்....
No comments:
Post a Comment