Tuesday, October 16, 2012

சமூக அறிவும் சமூக சிந்தனையும் சமூக உணர்வும், ஆக்க பணிகளுக்கு பயன்படுத்தினால் சமூகத்திற்கு பலனுண்டு , நிச்சையம் போற்றப்படும்.  இதை தான் நாங்களும் சொல்கிறோம். "டுமில் டேசியம்,டமில் டேசியம்"  என்று பேசி நேரத்தை வீணடிக்காமல்  ஆக்க பூர்வமான  வேலைகளை செய்தால் எங்களுக்கும் நேரம் மிச்சம். இப்படி நேரத்தை "டுமில் டேசியம்,டமில் டேசியம்"  என்று செல விட தேவை இல்லை. "டுமில் டேசியம்,டமில் டேசியம்"  என்பதை பேசுவதை நிறுத்திவிட்டு தலித் அரசியலை வாழ்வாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு, மனிதனின் மலத்தை மனிதனே அள்ளுவதை ஒழித்தல்,  தனியார் துறையில் இட ஒதிக்கீடு, இரட்டை வாக்குரிமை, நில மீட்பு   போராட்டம்,  வாழ இல்லம், இந்து திராவிட தமிழ் அடையாள  ஒழிப்பு, மானுடத்தை காக்க  தம்மத்தை ஏற்றல், தமிழர்களால் அழித்து ஒழிக்கப்பட்ட சாக்கிய கலாச்சாரத்தை மீட்டு எடுத்தல், மீண்டு காஞ்சியில் பாலி மொழியில் பல்கலை கழகத்தை  நிறுவுதல், மண்ணோடு  மன்னாக  புதைக்க ப்பட்ட பாலி மொழி யய்  மீட்டு எடுத்தல், தலித்துக்கள் மீது நடக்கும் வண்கொடுமைகளை கண்காணித்து அதை ஒழிக்க ஆக்க பூர்வமான பணிகள். இதை எல்லாம் செய்வதை வுட்டுட்டு "டுமில் டேசியம்,டமில் டேசியம்"  என பேசிட்டிருக்க வேண்டாம் என்று  எமது சொந்தங்களுக்கு சொல்கிறோம். டுமில் டமில் பற்றி நாங்க நையாண்டி செய்வது இருக்கட்டும், இது இப்பத்தான் ஆரம்பித்தது. பல நூற்றாண்டுகளாக சாக்கியர்களையும் அவர்களது மொழியையும் அவகளது கடவுளையும் டமிளர்கள்  நையான்டி செய்து வருவதும் கேலி செய்து வருவதும் வரலாறு. ஒண்ணுமே இல்லாத கற்பனை சங்க கால கூட்டத்துக்கே அவ்வளவு நக்கல்னா. அனைத்து வரலாற்று ஆதரங்களையும் செதுக்கி வைத்து விட்டு  போன காஞ்சியில் பல்கலை கழகம் கட்டி மொழி வளர்த்த சாக்கியர்களின் பிள்ளைகளான எங்களுக்கு எவ்வளவு இருக்கும்.....



///திருமா தமிழ் தேசியம் பேசினால் தான் ஊடகங்களில் வருகிறது. தலித்தியம் பேசினால் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.////  விளம்பரத்துக்கு அரசியல் பண்ணனும்னா "டுமில் டேசியம்,டமில் டேசியம்" பண்ணுங்க. தலித் அரசியல் பண்ணனும்னா விளம்பரம் கண்டிப்பா வராது. இந்த உண்மைய சொன்னதுக்கு மிக்க   நன்றி. விளம்பரம் இல்லாததால் தான் நிறைய தலித் தலைவர்கள் உலகுக்கு தெரியாமல் இருக்கிறார்கள்...

No comments: