எதிரிகளை கூட கொல்லக்கூடாது, தற்காப்புக்கு மட்டுமே கொலை அனுமதிக்கப்படலாம் எனும் அண்ணலின் need to kill எனும் கொல்லாமை கொள்கையை ஏற்றுக்கொண்டவன் நான். ஒரு மரண தண்டனை எதிர்ப்பாளனாக ஜாதியை ஒழிக்க கொலை செய்தனர் எனில் அதையும் எதிர்ப்பவன். இருப்பினும் நண்பர் சொல்லுவது போல தலித் மக்கள் தண்ணீர் எடுத்து குடிக்கும் கிணற்றில் பீயை கலந்தவர்களை பிரபாகரன் சுட்டுக்கொள்ள ஆணையயிட்டது உண்மை எனில் இனி மேல் ஒரு போதும் நான் பிரபாகரனையும் அவரை தலைவராக ஏற்றுள்ள திருமா உட்பட ஒருவரையும் விமர்சிக்க மாட்டேன். ஒண்ணுமே இல்லாமலே அவர் அப்புடி இப்புடின்னு நம்மவர்கள் கதை உட்டுனு இருக்காங்க. பிராபகரன் அப்புடி செஞ்சு இருந்தா இந்நேரம் அவரை கடவுள் ஆக்கி ஒவ்வொரு சேரியிலும் கோயில் கட்டி இருப்பார்கள்.
No comments:
Post a Comment