Friday, October 26, 2012

அண்ணல் அம்பேத்கர் நான் இந்திய தேசிய தலைவர் எல்லோருக்கும் தலைவர் அப்படின்னு சொல்லல. நான் எனது மக்களின் பிரதி நிதி. எனது மக்களின் உரிமைகளுக்கு பேசவே இங்கு வந்து இருக்கிறேன் என்று சொன்னவர். என்  வாழ் நாள் முழுக்க என் மக்களுக்கு உழைப்பேன் என்று சொன்னார்.  அவர் மானுடத்துக்கு தந்தை என்று சொல்லலாமே ஒழிய இந்திய தேச தந்தை என்று சொல்லுவது அவருக்கு இழுக்கு. ஆனா நம்ம அண்ணன் நமது கட்சி டுமில் தேசிய கட்சி நான் டுமில் தேசிய தலைவர்ன்னு அவரே சொல்லிக்கிறார. ஆனா சேரிக்கு அந்த பக்கம் ஒருத்தனும் அவர் கொடிய ஏத்த உட மாட்டுறான்... அத விட கொடுமை அவருக்கு துரோகி பட்டம். இனியாவது அவர் இந்த டுமில் தேசிய அரசியலை புரிந்து கொண்டு நம்ம பக்கம் வரணும்...

No comments: