Monday, October 15, 2012


சாக்கிய மக்கள் எல்லாம் புத்த மதத்துக்குள் மாறி விட்டால் அதனால் ஆகப்போவது என்ன? இப்படியும் சிலர் கேட்டு திரிவார்கள். அப்படி பேச வேண்டாம் என நான் அவர்களை கேட்டுக்கொள்வேன் ஏனெனில் சாக்கியர்களின்  வாழ்வில் இது பெரும் நாசத்தை விளைவிக்கும். ஜாதி இந்துக்களும் பணம் படைத்தவர்களும் மதத்தின் அவசியத்தை புரிந்து கொள்ள மாட்டார்கள். மேட்டு குடிகளும் அதிகார வர்க்கத்தினரும் வாழ்வதற்கு மாளிகைகள் உண்டு அவர்கள் சொன்னதை செய்ய ஏவலர்கள் உண்டு. அவர்களுக்கு அந்தஸ்தை அளித்திட உடைமைகள் உண்டு. அவர்கள் மதத்தின் தேவை பற்றி சிந்திக்க வேண்டிய வைப்பு இல்லை. - அண்ணல் அம்பேத்கர் (இது மதம் வேண்டாம் என சொல்லும்  ராமசாமி போன்ற பணம் படைத்த பண்ணைகளுக்கு பொருந்தும்) 


பறையர் என்பது ஜாதி அல்ல. அது ஜாதிக்கு எதிரான அடையாளம். ஜாதியை எதிர்த்தவர்களின் அடையாளம். ஜாதி வருணத்திற்கு அப்பாற்ப்பட்ட அடையாளம். தலித் என்பது வருவதற்கு முன்னர் அனைத்து தலித் மக்களையும் குறிக்க பல நூறு  வருடங்களாக பயன் படுத்தப்பட்ட வார்த்தை. அங்கிலேயர் கூட  அதைதான் ஆரம்பத்தில் பயன்படுத்தினார்கள். அண்ணலை பறையர் ஆக்குவது தவறு எனும் முதலை கண்ணீர் வேண்டாம். முதலில் பறையர் எனும் வார்த்தையை குறுக்கி ஒரு சிறிய குழுமத்தின் அடையலமக்கியதே தமிழ் திராவிட அரசியல்தான். சாக்கியர் வள்ளுவர் பறையர் என்பது இன்றைய தீண்டா மக்களின் மூதாதையரை  குறிக்க தமிழ் இலக்கியதில் பயன் படுத்தப்பட்ட வார்த்தைகள்.....

No comments: