இளையராஜாவுக்கு பறையன்ற உணர்வு இல்லைன்னு எவன் சொன்னது. அவர் அடிக்கும் ஒவ்வொரு அடியிலும் அவர் பறையன் பறையன் எனும் முத்திரையை குத்தி இருக்கார். அன்னக்கிளி படத்தின் டைட்டில் இசையை கேட்டு பருகங்கள். அவர் யாருன்னு தெரியும். அன்னைக்கு அதை கேட்டு முகம் சுளித்தவர்கள் கூட பின்னால் அதை ரசிக்க ஆரம்பித்தனர். அன்று முதல் இன்று வரை தமிழ் திரை உலகை ஆட்டுவித்தது இளையராஜா எனும் மனிதர் மட்டும் இல்லை. பறை எனும் அவரது இசையும்தான். அது இல்லை எனில் இளையராஜா இல்லை. அது அவர் முன்னோர்கள் அவருக்கு கொடுத்த ஞானம். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமா தான் யாருன்னு தனது அடையாளத்தை சொல்லுவார்கள் இளையராஜா பயன்படுத்தியது இசை என்னும் மீடியா அது அவரை மட்டும் தலை நிமிர்த்தவில்லை. பல ஆயிரம் பறையர்களை தலை நிமிர்த்தியது. டேய் அவன் பறையண்டா அவன் அடிப்பது பறை இசைடா........
No comments:
Post a Comment