Monday, October 22, 2012

ஐயா சாமி அது என்ன ஓஷோ சொன்ன அப்புடியே ஏத்துக்குவீங்களா? உங்க மூளையையும் கொஞ்சம் யூஸ் பன்னுங்க. ஆமாம் புத்தர் ஹினயானமா? மஹாயானமா? உண்மையான பவுத்தர்கள் ஹினயானமா? மகாயானமா? ஓஷோ ஏதாவது சொல்லி இருக்காரா?

ஹினயானம் தோன்றும் முன்னரே புத்தரை மக்கள் பின்பற்றிக்கொண்டு தான் இருந்தார்கள். அதுக்கு தம்மயானான்னு பெயர் வைக்கலாமா?

இல்லை புத்தயானனன்னு பெயர் வைக்கலாமா?

நான்கு சத்தியங்கள், எண்மார்க்கம், பஞ்ச சீலம், தஸ பரமிதம் (பத்து புத்தரின் குணங்கள், நிலையாமை, அநாத்துமா கொள்கை எல்லாம் எல்லா பவுதர்களுக்கும் பொதுவானது. வேறுபாடு என்னான்னு சொல்ல முடியுமா?

கொள்கை மாறி போனவங்க புத்த தம்மிகள் கிடையாது. அவர்கள் ஹீனயானிகள், மஹாயானிகள்.  பூர்வ புத்த தம்மிகள் தம்மயானிகள்... இது மூன்றாம் பிரிவு இல்லை. மூலம்....

இன்று எல்லா பவுத்தர்களும் மூலத்தை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறார்கள். நான்கு சத்தியங்கள், எண்மார்க்கம், பஞ்ச சீலம், தஸ பரமிதம் (பத்து புத்தரின் குணங்கள், நிலையாமை, அநாத்துமா கொள்கை எல்லாம் எல்லா பவுதர்களுக்கும் பொதுவானது. இதில் எந்த யானைத்துக்கும் பிரச்சனை இல்லை. பிரச்சனை உங்களுக்கு தான்..

அசோகரது தம்மம் ஹீனமும் இல்லை மகாயனமும் இல்லை. அவர் புத்தரின் உண்மையான தம்மத்தை தான் பரப்பினார். அப்போது ஹீனம் மகாயானம் எனும் பிரிவுகள் இல்லை. ஆனந்தர் ஹீனயணம் என்பதும் உண்மை அல்ல. போதி தம்மர் ஹீனம் என்பதும் உண்மை அல்ல. ஹீனம் மகாயானம் எனும் பெயர்கள் வந்தது எப்போது என்று சொன்னால் நல்லா இருக்கும்....

புத்தர் தான் எங்கு மஹா நிப்பாணம் அடைய போகிறோம், எப்போது அடைய போகிறோம்னு முன்னரே அறிந்து சொன்னார். அவர் தான் சொன்னது போல மள்ளர்களின் பூமியில் மஹா நிப்பாணம் அடைந்தார். புத்தர்கள் மரணத்தையும் மறு பிறப்பையும் வென்றவர்கள்.

நான்கு சத்தியங்கள், எண்மார்க்கம், பஞ்ச சீலம், தஸ பரமிதம் (பத்து புத்தரின் குணங்கள், நிலையாமை, அநாத்துமா கொள்கை எல்லாம் எல்லா பவுதர்களுக்கும் பொதுவானது. இதுதான் அடிப்படை...


நான்கு சத்தியங்கள் : துக்கம், துக்கத்திற்கான கரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் (எண் மார்க்கம்). 

புத்தம் உங்க நாட்டு மதம் இல்லை. அது உலக மக்களுக்கெல்லாம் பொதுவான் தூய மதம். எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. உங்க மதம் உங்க எல்லைய கூட தாண்டாது.....


தம்மம் எந்த மதத்தின் பிரிவும் இல்லை அது சுயம்....அது உலக உயிர்களின் துன்பம் தீர்க்க வந்த நிவாரணி....

புத்தரின் கொள்கை தான் புத்த மதத்தின் அடிப்படை. சும்மா அது வேற இது வேறன்னு கத உட கூடாது. 

கொள்கையில் மாற்றம் இல்லை எனில் பிரிவுகள் இல்லை... 

கொள்கை வேறுபாடு இல்லாமல் ஹீனயனமும் மஹாயானமும் இல்லை. அவர்கள் அடிப்படை கொள்கை கோட்பாட்டில் இருந்து விலகும்போது பிரிவுகளாக மாறுகிறார்கள்... 

அப்படின்னா புத்தர் செத்த பின்னர் அவரது கொள்கையை விட்டு இவர்கள் விலகி போய்  விட்டனர்....அப்படி எனில் இவர்கள் பவுத்தர்களா? 


உண்மையான புத்தரின் கொள்கையை பின்பற்றும் பவுத்தர்களிடம் பிரிவுகள் இல்லை.


புத்தரின் அடிப்படை கொள்கையில் இருந்து  மாறி போனவர்கள் பவுத்தர்களா?

///அப்படி நீங்கள் சொல்கிறீர்கள்.// யோசித்து சிந்தித்து நான் தான் சொல்றேன். யாரோ சொன்னத மண்டபத்துல இருந்து எழுதிட்டு வந்தா பேசுறேன்....


அவர்கள் இதை பின்பற்றுகிறார்கள் எனில் நிச்சயம் பவுத்தர்களே.

இரண்டும் இரு கண்களே. இருவரும் தம்மத்தை "நான்கு சத்தியங்கள் : துக்கம், துக்கத்திற்கான கரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் (எண் மார்க்கம்)." தான் போதித்தார்கள். 

இருவரும் சாக்கிய குல குருக்களே....


அவர்கள் கொள்கைகளில் எந்த வேறுபடும் இல்லை. அதை படிப்பவர்களின் மூலையில் கோளாறு  இருந்தால் அடிபப்டை தத்துவத்தை புரிந்து கொள்ள முடியாது... 


அடிப்படை வித்தியாசம் இல்லை இல்லை இல்லவே இல்லை.... 

இது இல்லை எனில் புத்தம் இல்லை புத்த மதம் இல்லை.....

ஏசு இல்லாத கிறித்துவம், அல்லா  இல்லாத இஸ்லாம், தம்மம் இல்லாத புத்தம் சாத்தியமா? 

கிண்டல் பண்ண கூடாது. கொள்கையில் வித்தியாசம் கேட்டா வயசு வித்தியாசம் சொல்றீங்க ....

தம்மம் என்றால் தன்மை ... தன்மை என்றால் இயற்க்கை, பண்பு... இத பற்றி பேசுவதுதான் புத்தம்....

மானுட தம்மம் என்றால் மனித தன்மை என்று பொருள்...







No comments: