தலித்துன்னு பொதுவா பேசுனா பறையன் அரசியல் என்கிறார்கள். சரி விடுங்கப்பான்னு பறையர்கள் பத்தி பேசுனா சுய ஜாதி பிரியர் என்கிறார்கள். அனான பட்ட அண்ணல் அம்பேத்கருக்கே சுய ஜாதி பிரியர் பட்டம் கட்டியவர்கள் தான் இந்த சூத்திர ஜால்ரா கூட்டத்தினர். அண்ணல் நடத்திய கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் மகார்கள் என்றும் அவர் கட்சியின் சார்பாக தேர்தலில் நின்றவர்கள் எல்லாம் மகார்கள் என்றும் அவரது கட்சி மகார்களின் கட்சி அவரது கட்சியில் சம்மார்களுக்கும் மாங்குகளுக்கும் அவர் இடம் தரவில்லை என சொன்னவர்கள் தான் இந்த சூத்திர ஜால்ரா கூட்டத்தினர். அண்ணல் புத்தம் தழுவும் முன்னர் அவர் மகார்களை கூட்டி பேசினதை கூட அவர் மகார்களை மட்டுமே அணுகுகிறார மற்றவர்களை அவர் அணுகவில்லை என்று சொல்லி அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்து மகார் அல்லாத மற்ற சமூகத்தினரை தம்மம் தழுவுதலுக்கு எதிராக ஆக்கினார்கள். அண்ணல் அம்பேத்கர் மகார்களுக்கு மட்டும் செய்யவில்லை அகில இந்தியாவில் உள்ள அனைத்து தலித் மக்களுக்காகவும்தான் பாடுபட்டார் ஆனால் அன்று அவரோடு இருந்தவர்கள் யார் கடைசியில் அவர் தம்மம் தழுவிய பொது அவரோடு சென்றவர்கள் யார் என்றால் மகார்கள் தான். இது அண்ணல் செய்த தவறு இல்லை. இதுதான் சமூக கட்டமைப்பு.
No comments:
Post a Comment