Saturday, October 27, 2012

இட ஒதிக்கீடு இட ஒதிக்கீடுன்னு பேசுறவங்க எல்லோரும் ஆனா வூனா கழிவரை சுத்தம் செய்யும் வேலை செய்பவர்களை  பற்றி பேசிக்குனு  இருக்காங்க. ஆதரவா பேசுறவனும் அவுங்களைதான் இழுக்கறான் எதிர்ப்பா பேசுறவனும் அவுங்களைதான் இழுக்கறான். உண்மையில் கழிவறை சுத்தம் செய்பவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டுக்கும் சம்பந்தம் இருக்கா? இந்த அறுபது ஆண்டு காலத்தில் இட ஓதிக்கீட்டின் மூலம் எத்தனை பேர் கழிவறை சுத்தம் செய்யும் குடும்பத்தில் இருந்து மத்திய மற்றும் மாநில அரசு இட ஓதிக்கீட்டில் வேலை வாங்கி உள்ளனர். எத்தனை எம் எல் ஏ   எம் பி மந்திரிகள் ஐ எ எஸ் ஐ பி எஸ் மக்கள்  கழிவறை சுத்தம் செய்யும் குடும்பத்தில் இருந்து வந்து உள்ளனர்.

இன்னமோ  இட ஒதிக்கீடு என்பது கழிவறை சுத்தம் செய்பவர்களது பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட்டது போலவும் அதை அவர்கள் மட்டுமே அனுபவித்துக்கொண்டு இருப்பது போலவும் பேசிக்கிட்டு இருக்கீங்க. இதை அந்த தொழில் செய்யும் மக்கள் பேசுவது இல்லை. அந்த தொழிலுக்கு சம்பந்தமே இல்லாத, தங்களை  உயர் ஜாதி ஆண்ட பரம்பரைகள் டமில் தேசிய புலிகள், திராவிட புளிகள்ன்னு  சொல்லிட்டு இருக்கும் கூட்டங்கள் எல்லாம்  கழிவறை சுத்தம் செய்பவர்கள் பற்றி பேசிட்டு இருக்கு. இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் கூட்டம் அவர்கள் மீது ரொம்ப ரொம்ப இரக்கம் காட்டுது. இட ஒதுக்கீடு மூலம் இந்த கழிவறை சுத்தம் செய்யும் குடும்பத்தில் உள்ளவர்கள் பயன் அடயவில்லையாம் ஆதிக்க தலித் வகுப்பினரே அனுபவிக்கின்றனராம் அதனால இட ஒதுக்கீட்டை எடுத்துடனுமாம். 

இவர்கள் எல்லோரும் உண்மையிலேயே  கழிவறை சுத்தம் செய்யும் மக்களிடம் கருணை உள்ளவர்களா?  இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவா பேச  கழிவறை சுத்தம் செய்யும் மக்களை பற்றி பேசும்  பிற்படுத்த பட்ட மிகவும் பிற்படுத்த பட்ட சாதியினர் தங்கள் இட ஒதுக்கீட்டு உரிமையில் நாளில் ஒரு பங்கை இம்மக்களுக்கு தருவார்களா? இட ஒதுக்கீட்டு உரிமைக்கு  கழிவறை சுத்தம் செய்யும் மக்களை பற்றி பேசும் தலித் மக்கள் அவர்களது இட ஒதுக்கீட்டில் நாளில் ஒருபகுதியை இம்மக்களுக்கு தருவார்களா?   கழிவறை சுத்தம் செய்யும் மக்களுக்கு கழிவிரக்கம் காட்டும் பொது ஜாதியினர் தாங்கள் அனுபவித்து வரும் பொது இடங்களில் நாளில் ஒரு பகுதியை இம்மக்களுக்கு கொடுப்பார்களா? இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு ஊழியர்களாக உள்ள பிறபடுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஷெடுல்ட் இன மக்கள் அனைவரும் தங்களது வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை  கழிவரை சுத்தம் செய்யும் வேலை செய்பவர்களுடைய குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு கொடுக்க முன் வருவார்களா? அவர்களுக்காக எதுவுமே செய்யாம ஆணா  வூணா அவர்கள் மீது கழிவிரக்கம் காட்டி நடிப்பதும் இட ஒதுக்கீட்டை நியாய படுத்த  அவர்களை  பயன்படுத்திக்கொள்வதும் அம்மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய  துரோகம்....





No comments: