ஆதியில் அய்யா என்று அழைக்கப்பட்டனர். அய்யா என்றால் மனிதன். மரியாதைக்கு உரியவர். அவர்களே சாக்க அய்யா, சாக்கியா, இந்தய்யா, இந்திரியர், இந்திரர் என்று பூர்வக்குடிகள் அழைக்கப்பட்டனர். (பெண்பால் : ஆயி/ ஆச்சி / அம்மா) சாக்கா என்றால் இந்திரியம் அல்லது இநதியம் என்று பொருள், இந்திரியர்/ இந்திரர் என்றால் இந்தியத்தை வென்றவர் என்று பொருள். இந்தியத்தை வென்ற புத்தனை அய்யா என்றும் அரியா என்றும் ஆரியா என்றும் அழைத்தனர். அவரை பின்பற்றியவர்களை தற்போது பவுத்தர்கள் என அழைப்பது போல ஆதியில் அய்யன் புத்தனை பின்பற்றியவர்களை அய்யா அரியா ஆரியா என்று அழைத்தனர். புத்த மார்க்கத்தை அய்ய அட்டாங்க மக்கா (aiya attanga magga) என்பர், அது பின்னால் அரிய அட்டாங்க மக்கம் ஆகி அதன் பிறகு ஆரிய அட்டாங்க மார்க்கம் ஆனது. புத்தனை பின்பற்றிய மக்களை அய்யா, மா அய்யா, பா அய்யா என்று அழைத்தனர். அய்யா என்பதே பின்னால் அரியா என்றும் ஆரியா என்றும் மாறியது. ஆங்கிலத்தில் அய்யா என்பதற்கு Sir/ Noble/ Lord என்று அர்த்தம். அரிய/ஆரியன் எனும் வார்த்தைக்கு மூலம் அய்யா எனும் பாலி வார்த்தை. அரிய செயல் என்றால் சிறந்த செயல் என்று பொருள். அப்படி அரிய செயல் செய்தவர்களை அரியர் அல்லது ஆரியர் என்பர். இந்த அரிய, ஆரிய செயற்கரிய செய்தவர்காளை மா அரியர்கள், பா ஆரியர்கள், வீ ஆரியர்கள் என்றனர். மாயன், மாரியன், பாரியன் போன்ற வார்த்தைகள் உருவானது. ஆதியில் "ற" "ஐ" "ஔ" எனும் எழுத்துக்கள் கிடையாது. பின்னால் அவை உருவான பிறகு பா அய்யன்/ பரியன் /பாரியன் பறையன் (பா + அறையன்) ஆனான். மாரியன், மா ஆரியன், மௌரியன் ஆனான். மா அரி என்பவன் மஹார் ஆனான். பறையன் எனும் வார்த்தைக்கு மூலம் பா+அய்யா. இன்னைக்கும் ஒரு புராண காலத்து சமூகத்துக்கு மாயன் எனும் பெயர் உள்ளது. மாயன் என்றால் மா அய்யன் என்று பொருள். மாயன், பா அய்யன், மரியன், பாரியன், மவுரியன், மஹார், மகா அரியர், பறையன், சாக்கியன், இந்திரன், இந்தியன் என்பது எல்லாம் ஒரே மக்களின் பல் வேறு பெயர்கள். (இதற்கு ஆதாரம் வேண்டும் எனில் மத்திய இந்தியாவில் உள்ள முண்டா இனத்தை பற்றி ஆராய்ந்துள்ள ஆராய்ச்சி நூல்களை படிக்கவும். பறையர்கள் திராவிடர்கள் அல்ல அவர்கள் முண்டா இனத்துடன் தொடர்பு உள்ளவர்கள் எனும் விளக்கமும் அங்கு உள்ளது).
இது தவிர பண்டிதர் அயோத்தி தாசர் பறையர்கள் என்போர் சாக்கிய தம்மத்தை பறைந்தவர்கள். சாக்கியர்கள் தம்மத்தை பறைய வந்த போது தம்மபம் பறைய வருகிறார்கள் தம்மம் பறைய வருகிறார்கள் என்று சொன்னதால் சாக்கியர்களுக்கு பறையர்கள் எனும் பெயர் வந்தது என்கிறார்.
சிலப்பதிகாரத்தில் பறை என்பது பண்டங்களை அளக்கும் கருவி. சேரி என்பது வணிகர்கள் வாழும் பகுதி. பறை என்று அந்த கருவி சேரியில் இருக்கிறது. பறையர்கள் அதை பயன்படுத்தியதால் அது பறை என்று சொலப்படுகிறதா அல்லது அந்த கருவியை பயன்படுத்தி வாணிபம் செய்த மக்கள் பறையர்கள் ஆனார்களா என்பது ஆய்வுக்கு உரியது. இது பறை எனும் இசை கருவிக்கும் பொருந்தும். பறை அடித்ததால் இவர்கள் பறையர்கள் ஆனார்களா இல்லை பறையர்கள் அடித்ததால் பறை எனும் இசை கருவிக்கு பெயர் வந்ததா என்பது ஆய்வுக்கு உரியது.
பறையன் என்பதற்கு நாட்டை ஆண்டவர்கள் என்று பொருள் கூருகிறார தமிழ் அறிஞர் மு வராதரசனார். பார் என்றல் உலகு அய்யா என்றால் ஆண்டவர்கள் என்று பொருள். பறையன் என்பதற்கு மண்ணின் மைந்தர்கள் பூமி புத்திரர்கள் என்றும் பொருள் சொல்லலாம்.
பறையர் என்பது பொறையார் எனும் வார்த்தையில் இருந்து வந்திருக்கலாம் என்பதும் வரலாறு. பறையர் பொறையார் ஆனதா அல்லது பறையர் பொறையர்கள் அனார்களா என்பது கேள்விக்கு உரியது. பொறையார் என்றால் சகிப்பு தன்மை உடையவர்கள் என்று பொருள்.
பறையர் எனும் வார்த்தை அறிவு என்பதில் இருந்தும் வந்திருக்கலா. அறிவுடையோர் பேரறிவு உடையோன் பா அறிவர் என அழைக்கப்பட்டு அவர்களே பின்னல் பறிவர் ஆகி பறையர் ஆகி இருக்கலாம்.
அறை என்றால் இல்லம். பா அரை என்றால் உயர்ந்த இல்லம். விகாரி (பீகாரி) எனபது தமிழில் பா அறையர் ஆக மொழி மற்றம் செய்யப்பட்டு இருக்கலாம்.
பறை என்றால் கல். கல்லில் இருந்து தோன்றிய முதல் குடி என்பதால் பறையர் என அழைக்கப்பட்டனர் இரு சொல்பவர்களும் உள்ளனர்.
பெரியார் (சான்றோர் அறிவோர் அரியர்) என்பது பறையர் ஆகியது என்றும் விளக்கம் சொல்லப்படுகிறது.
பாலி பர ஜாதி என்றால் உயந்த பிறப்பு என்று அர்த்தம். சமஸ்கிருதத்தில் பர ஜாதி என்பது ஜாதி அற்றவர்கள் வெளி ஜாதியினர் வருணத்துக்கு அப்பார்ப்பட்டவர்கள் பார்ப்பனர்களுக்கு எதிரானவர்கள் என்றும் பொருள் சொல்லப்படுகிறது.
இன்னும் நிறைய ஆய்வு செய்தால் பறையர்களை பற்றியும் அவர்களுக்கு அப்பெயர் வர கரணம் என்ன என்றும் மேலும் அறியலாம்.
அதை உட்டுட்டு பறை அடிதததால் பறையன் அனான்னு அரச்ச மாவையே அரைக்க கூடாது. ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லி உண்மை ஆக்கும் பொய்யால் வளர்ந்த தமிழ் புலவர்களுக்கு சொல்லியே கொடுக்க தேவை இல்லை. பார் ஆண்ட ஆதி குல மக்களை போருக்கு பறை அடிக்கும் ஏவலர்களாக காட்டி சிறுமை படுத்தும் கூட்டத்தை காரி தூ தூ என துப்புவோம்.
இது போல பறையர் என்பதற்கு ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன சொல்லுவோம். அது போல தமிழ் என்பதற்கு தமிழன் என்பதற்கு அர்த்தம் என்னனு கேட்டா உங்களால் சொல்ல முடியுமா? தமிழ் பேசியதால் தமிழன்னு சொல்ல கூடாது. அப்புறம் தமிழுக்கு தமிழ்னு எப்படி பெயர் வந்ததுன்னு கேட்பேன். Etymology அப்படின்னு ஒரு துறை இருக்கு அவுங்க கிட்ட போய் தமிழுக்கு அர்த்தம் என்னன்னு கேளுங்க.
1 comment:
முதிர்ச்சி இல்லா அறைகுறை அறிவோடு கூடிய விளக்கம்
Post a Comment