முன்னேறிக்கொண்டு தான் இருக்கிறோம். இட ஒதுக்கீட்டில் முன்னேறியவர்கள் சமூகத்துக்கு தனது கடமையை செய்ய வேண்டும் என்பது சமூக அறம் (social ethics), ஆனால் அது கட்டாயம் அல்ல. இந்த சமூகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த உரிமையில் பங்கு உண்டு. முன்னேறிய மக்கள் விட்டு கொடுக்க வேண்டும் என கேட்பது சரியே. ஆனால் இந்த சமூகத்தில் உள்ள ஏழைகளை விட இந்த சமூகத்தில் முன்னேறிய மக்கள் மீது ஜாதி இந்துக்களுக்கு காழ்ப்பு உணர்ச்சி அதிகம். முன்நேரிய மக்கள் இருக்கும்போதே தகுந்த ஆட்கள் இல்லை என பல இடங்கள் பூர்த்தி செய்யாமல் வைத்திருக்கும் இந்த கூட்டம் முன்னேறிய மக்களை நீக்கி விட்டால் என்ன செய்வார்கள். முன்னேறிய மக்களை பொது (General) இடங்களிலும் விட மாட்டார்கள் இட ஒதுக்கீட்டு இடங்களிலும் அனுமதிக்க மாட்டார்கள். முன்னேறிய மக்கள் மீது அவர்கள் காட்டும் வெறுப்பை முக புத்தகத்திலேயே பார்க்கலாம். இட ஒதுக்கீடு என்பது ஏழ்மைக்காக இயலாமைக்காக கொடுக்கப்பட்டது அல்ல. அது அனைத்து இடங்களிலும் சாக்கிய மக்களின் ரெப்பிரசண்டேஷன் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதற்காக கொடுக்கப்பட்டது. அரசு துறைகளில் மட்டும் இல்லாமல் தனியார் துறைகளிலும் அது அவசியம். அரசு பள்ளிகளில் மட்டும் இல்லாமல் பணக்கார கூட்டம் படிக்கும் பள்ளிகளிலும் சாக்கிய மக்களின் ரெப்பிரசண்டேஷன் பிரதிநிதித்துவம் அவசியம். லட்சம் லட்சமா கொட்டி கொடுக்கும் இடத்திலும் சாக்கிய மக்கள் செல்ல வேண்டும் என்பதே சமத்துவம். பெரும் முதலாளிகள் விற்கும் பங்குகளில் கூட சாக்கிய மக்களின் ரெப்பிரசண்டேஷன் பிரதிநிதித்துவம் அவசியம். லட்சம் லட்சமா பணம் இருக்கு இட ஒதுக்கீடு இல்லை எனில் அங்கு நம் பிள்ளைகள் படிக்க அனுமதிக்கப்படுவதில்லை எனில் அங்கு இட ஒதுக்கீடு அவசியம். இட ஒதுக்கீடு இல்லாமலேயே நம் மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் எனில் அங்கு நமக்கு இட ஒதுக்கீடு அவசியம் இல்லை....
No comments:
Post a Comment