உலக மாமேதை கொலம்பியாவில் டாக்டர் பட்டம் பெற்ற அண்ணல் அம்பேத்கரை குழந்தை கூட அம்பேத்கர் என்கிறது. ராமசாமியை ராமசாமின்னு சொல்லாம கந்தசாமி கோபாலசாமின்னா சொல்ல முடியும். பண்ணை அடியாட்கள் வேணும்னா ராமசாமியை அய்யா சாமின்னு சொல்லுவாங்க. பாவம் அது அவுங்க வயித்து பிழைப்பு. ஆனால் நான் சாக்கிய பறையன் சுயமரியாதை தன்மானம் கொஞ்சம் ஜாஸ்தி. அதை ராமசாமிக்கு சொல்லி கொடுத்ததும் நாங்கள் தான். அதனால ராமசாமியை ராமசாமின்னு தான் சொல்லுவேன். பாப்பான் ராமசாமின்னு சொல்றதுக்கும் பறையன் ராமசாமின்னு சொல்லுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. பாப்பான் சூத்திரனை ராமசாமின்னு சொல்லுறது ஆதிக்க மனோநிலை. பறையன் சூத்திரனை ராமசாமின்னு சொல்லாமல் ஐயா சாமின்னு சொல்லுறது அடிமை மனோ நிலை. நான் ஐயா சாமின்னு சொல்லனும்னு நினைப்பது சூத்திரர்களின் ஆதிக்க மனோ நிலை. எனக்கு பதில் சொல்ல நான் யாருக்கும் எந்த தகுதியும் நிர்ணயிப்பது இல்லை. ஏனெனில் எங்கள் பரம்பரை சமத்துவத்துக்கு போராடிய சாக்கிய பரம்பரை. எல்லோரையும் சமமா நடத்துவோம். நீங்க தகுதி பாத்து ஸ்டேடஸ் போடறவங்களா? நீங்க பதில் போடணும்னா எங்களுக்கு என்ன ஸ்டேடஸ் வேணும். கனடாவுல இருக்கனுமா? கொலம்பியவுல படிச்சு இருக்கனுமா இல்லை சூத்திர பண்னையாரா இருக்கனுமா? ராமசாமி கதர் ஆடை துளசி மாலை போட்டுக்குனு காந்திக்கும் ராஜாஜிக்கும் காங்கிரசுக்கும் கூஜா தூகியதுக்கு ஆதாரம் கேக்குறீங்களா? இல்லை அவர் பகுத்தறிவு பார்ப்பனிய எதிர்ப்பு பேசாத காலத்திலேயே எங்கள் மக்கள் பார்ப்பன எதிர்ப்பு பகுத்தறிவு பேசியதற்கான ஆதாரம் கேக்குறீங்களா? ராமசாமி வைக்கம் கோயில் நுழைவுக்கு போன போது நாங்கள் இந்துக்கள் அல்ல எங்களுக்கு கோயில் நுழைவு தேவை இல்லை என தனமானத்தோடு கோயில் நுழைவு வேண்டாம் என எங்கள் இன தலைவர்கள் கோயில் நுழைவை எதிர்த்ததுக்கு ஆதாரம் கேட்கிறீர்களா?
No comments:
Post a Comment