Tuesday, October 2, 2012

நம்மிடையே இது போல பல குறைகள் உள்ளன. விமர்சனங்கள் அவசியம். அதுக்காக எப்ப பாத்தாலும் விரக்தியா நெகட்டிவா பேசாம, கொஞ்சம் பாசிடிவா பேசுங்க. நாம் மண்னோடு மண்ணாக போக இருந்த சமூகம். இன்னைக்கு வாழ்ந்து கொண்டு இருக்கோம். வளர்ந்து கொண்டு இருக்கோம்.  நம்மை பற்றிய உயர்வான விசயங்களை பேசுங்கள். ஒரு பள்ளி இழுத்து மூடப்பட்டு இருக்கலாம். அரசிடம் கொடுக்கப்பட்டு இருக்கலாம்., ஆனால் இன்னைக்கு பல பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. நம் மக்கள் அரசு ஊழியர்களா மட்டும் இல்லை தொழில் அதிபர்களா எழுத்தாளர்களா இசை அமைப்பாளர்களா இயக்குனர்களா  இருக்கிறார்கள். ஒருத்தர் அமெரிக்காவுள இருந்து ஸ்டாடஸ் போடுரறாரு  இன்னொருத்தர் இஸ்ரேல் இன்னொருத்தர் மலேசியா சிங்கப்பூர். இப்படி நம் மக்கள் உலகம் பூரா இருக்காங்க. அதுவும் ஹிந்து  தமிழ் டிரவிடம்னு முகத்தை மறைத்துக்கொண்டு இல்லை. தைரியமா நான் சாக்கியன் நான் பறையன்னு நான் பள்ளன்னு  சொல்லிட்டு வெளிய வராங்க. இப்பிடி விரக்தியா பேசிட்டு இருந்தா வருபவர்களும் ஓடி போயிடுவாங்க. அப்புறம் இயக்கம் உங்களை போல் ஓரிருவர் மட்டுமே நடத்திக்கொண்டு விரக்தியா பேசிட்டி இருக்க வேண்டியதுதான். நம்மை பற்றி பெருமையாக பேச பழகிக்கொளுங்கள். நம் வாழ்வியலை ஆராதிக்க கற்றுக்கொளுங்கள். நம்முடைய தத்துவமோ இயக்கமோ விரக்தியை மட்டுமே  அடிப்படையாக கொண்டு இல்லாமல். அது மனதுக்கு சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் தரும் இயக்கமாக மாறுங்கள். என் சமூகத்தில் உள்ள ஒரு சிலர் தவறுகள் செய்யலாம் அதுக்காக ஒட்டு மொத்த சமூகத்தை அவதூராக பேச வேண்டாம். இந்த சமூகத்தில் ஒவ்வொரு மூலையிலும் ஒரு பண்டிதர் ஒரு தாத்தா ஒரு அண்ணல் பிறந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.சமூக விடுதலை இயக்கம் என்பது வெறும்  எஸ் சி எஸ் டி  சங்கமோ / அரசியல் கட்சியோ அல்ல இது வெள்ளாறு என ஓடிக்கொண்டு இருக்கும் மாபெரும் இயக்கம். அதில்  பல பரிமானங்கள் உள்ளது  இதில் நாம் எல்லாம் சிறு துளிகள். நான் நாளைக்கு செத்தாலும் சந்தோஷமா சாவேன். எனக்கு விரக்தி இல்லை. என் கடமையை நான் செய்கிறேன். என் சமூகத்தின் எழுச்சியை என் கண் முன்னே காண்கிறேன்

No comments: