Thursday, October 11, 2012

இட ஒதுக்கீடு பிச்சை அல்ல உரிமை, மண்ணின் மைதர்களின் சம உரிமை

இட ஒதுக்கீடு பிச்சை அல்ல உரிமை, மண்ணின் மைதர்களின் சம உரிமை 

பறையர்கள் என்பது ஜாதி இல்லை அவர்கள் தனி இனம் தமிழர்கள் தோன்றும் முன்னர் தோன்றிய மூத்த குடிகள். சாதி ஒழிப்பை பற்றி பேசுவது எதற்கு...? என்று  ஜாதி ஒழிப்பு பேசும் திராவிட கூட்டத்திடம், அல்லது அவர்களுக்கு ஜால்ரா தட்டும் கூட்டத்திடம் கேட்க வேண்டிய கேள்வி. பறையர்கள்  ஜாதி அற்றவர்கள் வருணத்துக்கு வெளியானவர்கள் அவர்கள் பூர்வ பவுத்தர்கள். சாக்கிய குடிகள். அவர்களுக்கு ஜாதி ஒழிப்பு அவசியம் இல்லை.

நாங்கள் வளரவில்லை என யார் சொன்னது. எங்களுக்கு என்ன குறை வளர்வதற்கு? எங்கள் சொத்துக்களை எல்லாம் திருடி வைத்துக்கொண்டு எங்கள் உரிமைகளை எல்லாம் பிடுங்கி வைத்துக்கொண்டு நாங்கள் வளரவில்லை என சொன்னால் எப்படி.

இட ஒதுக்கீடு யாரோ யாருக்கோ போட்ட பிச்சைஅல்ல. நாங்கள் முடமாக பின்தங்கி இருந்ததற்காக கொடுக்கப்பட்டது அல்ல. அது நாங்கள்   மண்ணின் மைந்தர்கள் பூர்வீக குடிகள் என்பதற்காக போராடி பெறப்பட்ட உரிமை. இட ஒதுக்கீட்டின் வரலாறு தெரியாமல் பேசுகிறீர்கள். இந்த மண்ணின் முதன் முதலில் இட ஒதுக்கீடு கேட்டவர்கள் சுதேசிகள் (பார்ப்பனர்கள்). இந்திய மண் எங்களுக்கு சொந்தம் ஆங்கிலேயர்கள் அந்நியர்கள் அவர்கள் எங்களை ஆள  கூடாது. அணைத்து உயர் பதவிகளிலும் ஆங்கிலேயர்கள் உள்ளனர் எனவே சுதேசிகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என கேட்டவர்கள் பார்ப்பனர்கள். அது அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர்  சூத்திர கூட்டம் பார்பனர்கள் அல்லாதோர் திராவிடர்கள் நாங்கள் ஆரிய-பார்ப்பனர்கள் வருவதற்கு முன்னர் இங்கு வாழ்ந்த பூர்வவீக குடிகள் எனவே எங்களுக்கு பார்பனர்கள் அனுபவிப்பது போல சமமான உரிமைகள் வேண்டும் என கேட்டு பெற்றனர். அது போல சாக்கியர்கள்  (ஆதி திராவிட குடிகள்), நாங்கள் மண்ணின் மைந்தர்கள் பூமி புத்திரகள் இந்த ஆரிய திராவிட  கூட்டம் வருவதற்கு முன்னர் இம்மனில் வாழ்ந்த முதல் குடி எனவே எங்களுக்கு சாம உரிமை வேண்டும் என போராடி பெற்றது தான் இட ஒதுக்கீடு.

இட ஒதுக்கீடு என்பது சும்மா தூங்கிட்டு இருந்தவர்களுக்கு இறக்கப்பட்டு கொடுக்கப்பட்டது அல்ல. அது போராடி பெறப்பட்ட உரிமை. அது பரிதாபத்தல் ஆண்டைகள்  போட்ட பிச்சை அல்ல. ஆண்டைகளை அடக்கி ஆங்கிலேயரின் உதவியுடன் பெற்ற உரிமை. நாங்கள் எந்த சமூகத்தையும் பார்த்தும்  கழ்ப்புணர்ச்சி கொள்ளவில்லை. எங்கள் உரிமையை அனுபவிக்கிறோம். இது கேட்டு பெற்றது அல்ல அடித்து பெற்ற உரிமை. எங்கள் இனம் ஆங்கிலேயரின் இராணுவத்தில் புரிந்த சாதனைகளுக்கு ஆங்கிலேயர் கொடுத்த பரிசு. ஆரம்ப காலத்து ஆங்கிலேய ராணுவத்தில் இருந்தவர்கள் எல்லாம் பறையர் பட்டாலியன் என்பது வரலாறு. பறையர்களின் துணை இல்லாமல் இருந்து இருந்தால் ஆங்கிலேயர்  ஒரு புல்லை கூட புடிங்கி இருக்க முடியாது.

உங்கள் பரிவிரக்கதை திராவிடத்துக்கும் தமிழ் தேசியத்துக்கும் மாவு ஆட்டும் ஜால்ரா கூட்டத்திடம் காட்டுங்கள். நாங்கள் ராவ் பகதூர் தாத்தா இரட்டை மலை சீனிவாசன் பரம்பரை. அந்த காலத்திலே கப்பல் ஓட்டிய பரம்பரை. அந்த கலத்திலேய ஆறு குதிரை கட்டி சென்னை மாநகரில் கோச்சு வண்டியில் வளம் வந்த பரம்பரை.

எல்லா பறையர்களும் ஜாதி தமிழர்களிடம் கை கட்டி வேலை செய்தவர்கள் கிடையாது. பதினாறாம் பதிநேழாம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர் இந்த மன்னுக்கு வரும் காலங்களில் பறையர்கள் தங்களுக்கான போர் படைகளை வைத்து இருந்தனர் என ஆங்கிலேயர் எழுதிள்ள டைரிகளில்  பதிவு செய்து உள்ளனர். இன்னைக்கு தமிழர்கள் பெருமை படும் திருக்குறள் முதல் பல தமிழ் இலக்கியங்களை பாத்து காத்து கொடுத்தது எங்கள் இனம். தமிழர்கள் பெருமை பட்டுக்கொள்ளும் இசை எங்கள் இசை. வள்ளுவர்கள் இன்னும் தங்கள் கணித வானவியல் கலையை பாத்து காத்து வைத்துள்ளனர். மேற்க்கத்திய மருத்துவம் வரும் வரை உங்களுக்கு வைத்தியம் பார்த்தது எங்ள் மக்கள். இன்றும் பார்ப்பன பெண்களுக்கு கூட பிளைப்பேரு பார்ப்பவர்களி பறையர்களின் தாய்மார்கள்.


அறிவில் சிறந்த ஆன்றோர்களியும் அறிஞர்களையும் படைத்தது படைப்பது எங்கள் இனம். பண்டிதர் அயோத்தி தாசர் இல்லை எனில் பார்ப்பான எதிர்ப்பு பகுத்தறிவு எனும் கருத்துக்கள் நவீன காலத்தில் தமிழகத்தை வந்து அடைந்து இருக்காது. இன்னைக்கு கூட இளையராஜாவுக்கு சமமான ஒரு இசை வல்லுனரை காட்டுங்கள் பார்ப்போம். இப்படி வளர்ந்து கோலோச்சும் சமூகம் எங்கள் சமூகம். எங்களுக்கு எதுக்கு காழ்புணர்ச்சி.

இது போதுமா இல்லை இன்னும் வேணுமா. வரலாறு தெரியாத சொரிகள் நாங்கள் ஒடுக்கப்பட்டவர்கள் நசுக்கப்பட்டவர்கள் என பிச்சை எடுக்கும். நாங்கள் பிச்சை கார கூட்டம் அல்ல பங்காளிகள், நீங்கள் பிடுங்கி வைத்துள்ள அனைத்து உரிமைகளிலும் சம பங்கு உள்ள பங்காளிகள். திருட்டு கூடத்துக்கே இவ்வளவு வக்கனைனா உரிமைக்காரர்களான எங்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்...



No comments: