Sunday, September 9, 2012

அட்டகத்தி படம் .........இன்னும் நிறைய குளிச்சிட்டு ஜட்டிய தேடுறது, அம்மா அதை கரி துனியா பயன்படுத்துவது. கல்லூரியில் உட்ச்சாதி  அல்லது வேறு வேறு  பகுதியை சேர்ந்த தலித் மாணவர்களுக்குள் தகறாறு லோக்கல் தலித் தலைவர் பைக்ல வந்து புத்தி சொல்லுவது. அடுத்த (ஜாதி இந்து) ஊருக்கு சைட் அடிக்க செல்லுவது அடி வாங்கிட்டு ஓடு வருவது நம்ம பக்கம் வந்தா  துனிய கட்டி அடிப்பது.  அடுத்த ஊருக்கு போய் நண்பன் கிட்ட மணிக்கணக்கா பேசி அவன் பல வருடம் காதலித்த பெண்ணுக்கு நூல் விடுவது, துணி துவசிக்கிட்டே பெண்கள் பசங்களுக்கு சிக்னல் கொடுத்துக்கொண்டு இருப்பது, பஸ் ஸ்டான்ட் ரோமியோக்கள், காதல் கூட்டணிகள், காதலர்களை சேர்த்து வைக்க மணிக்கணக்கா பைக்ல அலைவது. நண்பன் வீட்டுல போய் காதல் பற்றி மணிக்கணக்கா பேசுவது, அவன் பொண்டாட்டி அவர் சொல்லுறத கேளுங்கன்னு கொடுக்கும் அட்வைசு. குடிபோதையில் அப்பன்கள் கத்த பிள்ளைகள் படிக்கிறேன்னு காதல் கவிதை எழுதும் காட்சிகள் பாசமான பேற பிள்ளை பயந்து அலறுவது. உடை, ஹேர் இஸ்டைல், மோதிரம்,  கழுதில் அணியும் கயிறுகள், கர்சிப் கட்டும் இஸ்டையில், டம்ளர்களுக்கு பிடிக்காத என்  தலித் பாஷை இப்படி காட்சிக்கு காட்சி தலித் வாசம் .............. அனுபவிச்சு பாக்கணும்....  ரொம்ப பெருமையா பீத்திக்கமா. நெகடிவா கொச்சை படுத்தாமல். நிதர்சனமான வாழ்வியல் உண்மைகளை காட்டியுள்ளனர். போங்கப்பா ரொம்ப நொஸ்தாளிஜியா இருக்கு... மிஸ் பண்றேன்.......

No comments: