சாக்கிய முனி : ஆண்டவனுக்கு ஒரு துளி சக்தியாவது இருந்தா இந்த உலகத்துல உள்ள துன்பங்களை எல்லாம் தீக்க சொல்லுங்க அப்புறம் உங்களுக்கு வேலையே இல்லை. பேசவே தேவை இல்லை.... எல்லா உயிர்களும் இன்புற்று இருக்கட்டும்!!!!!!!!!!
பெருமாள் அம்மவாசி தேவன் : சாக்கிய முனி அவர்களே, உலகில் உள்ள துன்பங்கள் மனிதாக உருவாக்கிக் கொண்டவை. அவற்றை மனிதன்தான் களைய வேண்டும். அவரது சக்தி எனக்குள் இருந்தால் அதை நான் செய்வேன். உங்களுக்குள் இருந்தால் நீங்களும் செய்யலாம். சமூக அவலங்களுக்கு மனிதனே காரணம். இறைவன் அல்ல.
சாக்கிய முனி : மனிதன் உருவாக்கிய துன்பங்களை மனிதன்தான் போக்க வேண்டும். அப்புறம், தூங்கி கிட்டு இருக்கும் அந்த ஆன்டவனை ஏன் தொந்தரவு பண்றீங்க.
பாவம் உலகத்த படைத்த களைப்பில் தூக்கிட்டு இருப்பார். கொஞ்சம் தொல்லை பண்ணாம இருங்க. நம்ம வேலைய நாம செய்வோம்.
நான் எங்க சாமி அவரை குறை சொன்னேன். நீங்க சொன்ன மாதிரி அவரு (ஆம்பளையா? பொம்பளையா?) கொடுத்த புத்தின்னே வச்சுக்குவோம். அதை தான் உங்களை பயன் படுத்த சொல்லுறேன். அத வுட்டுட்டு அவரை வீனா கலங்காத்தால தொந்தரவு பண்ணாதீங்க. அவர நீங்க தொந்தரவு பண்ணுறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. களைப்பில் தூங்கிட்டு இருபாரு விட்டுடுங்க. உங்க வேலைய பாருங்க அவரு கொடுத்த புத்திய பயன் படுத்துங்க.
நான் கடவுளை திட்டுற நாத்திக வெங்காயமும் இல்லை. கடவுள் இல்லை என கண்மூடிதனமாக நம்பும் நாத்திக நம்பிக்கையாளனும் இல்லை. ஆமாம், கடவுள்னா என்ன? என்ன்னே தெரியாத ஒரு விஷயத்த இருக்குது இல்லைன்னு சொல்லி இரண்டு வெங்காயங்கள் அடிச்சுக்குதுங்க.
முதல்ல குடும்ப பிரச்சனைய பாருங்க. அப்புறமா தமிழன் தமிழ் எல்லாம்.
டெய்லி பொண்டாட்டிய டார்ச்சர் பண்ணா. குடும்ப பிரச்சனைன்னு சட்டம் சும்மா இருக்காது உள்ள தூக்கி போட்டுடுவாங்க. வரதட்சணை கொடுமைனா ஏழு வருஷம்..
என்ன தான் உங்க குடும்ப பிரச்சனை. அதை முகபுத்தகத்துல போட்டு
பொண்டாட்டி புருஷன அடிக்கிற பிரச்சனையா?
பங்காளிகளுக்குள்ளே நில தகறாரா? அப்பன்னாலும் கோர்டுக்கு போகணும்.
சின்ன வாய் சண்டைனா, வீட்டுக்குள்ளேயே முடிச்சிக்கலாம்.
////தலித்துகள் தான் முதலில் ஆயுதம் ஏந்தி இருக்க வேண்டும்-தொல்.திருமாவளவன்///// வேணாம்பா, எங்களை கொலைகார கூட்டமா ஆக்கிடாதீங்க சாமி. எங்க அண்ணல் தாத்தா பண்டிதர் தந்தை (சிவராஜ்) அன்னை அக்கா (பெஹன்ஜி) இவுங்க எல்லாம் பேனா எடுத்ததால் இன்னைக்கு நாங்க மானத்தோடு வாழுரோம். இல்லைன்னா நாங்க இந்நேரம் குற்ற பரம்பரையா ஆயி இருப்போம். இன்னைக்கு உலகமே அண்ணலையும் அவரது கூட்டத்தையும் பார்த்து வியத்துக்கொண்டு இருக்கிறது. தலித்துன்னு சொன்ன அம்பேத்கரின் தொண்டர்கள் புத்த தம்மத்தை மீது உலகம் முழுக்க பரப்புபவர்கள் என்று உலகம் வியக்கிறது. உங்க பேரை தமிழன்னு சொன்னா புலி கூட்டமா LTTE யா வன்முறையாலர்கலாச்சே அப்படின்னு சொல்லுது. ஒவ்வொரு முறையும் நான் பறையன் (தலித்/ சாக்கியன்) from தமிழ்நாடு, தமிழன் இல்லை. நாங்க மொழி சிறுபாண்மையினர் என்று சொல்ல வேண்டி உள்ளது.
No comments:
Post a Comment