2005 இல் பிரபாகரன் பேசிய மாவீரர் உரைய கேட்டேன். அதுல ஒரு இரண்டு இடத்துல அவர் சிங்கள் பவுத்த பேரினவாத அரசுன்னு குறிப்பிடுகிறார். மத்த இடங்களில் எல்லாம் சாதாரணமா சிங்கள் அரசு என்றுதான் குறிப்பிடுகிறார். ஆனால் நம்ம திருமாவின் 2012 மாவீரர் உரையை கேட்டேன். வார்த்தைக்கு வார்த்தை சிங்கள பவுத்த பேரின வாதம்னு சொல்லி அதுக்கு ஒரு விளக்கம் வேறு கொடுக்கிறார். பிரபாகரன் மாவீரர் தின விழாக்களில் அப்படித்தான் சொல்லுவாராம். பவுத்தத்தின் மீது பிரபாகரணை விட திருமாவுக்கு அதிக வெறுப்பு இருக்கிறது என்பதையே அது காட்டுகிறது. சிங்களவர் மீதும் பவுத்தர்கள் மீதும் அவருக்கு இருக்கும் வெறுப்பை அவர் என்று விடுகிறாரோ அன்றுதான் அவர் மனித நேயம் மிக்க மனிதராக மாறுவார். தமிழர்களின் ஒற்றுமைக்காக வீடு கொளுத்தி மரம் வெட்டி கொலைகார கூட்டத்திடம் சமரசம் செய்ய துடிக்கும் திருமா; தமிழர்களுக்கிடையே எல்லா ஜாதிகளிலும் ஏழை எளிய மக்கள் உள்ளனர் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று ஒப்பாரி வைக்கும் திருமா; தலித் அல்லாதவர்களிலும் நல்லவர்கள் உள்ளனர்; தலித் அல்லாதவர்களிலும் ஜனநாயக சக்திகள் உள்ளனர் என்று சொல்லும் திருமா; சிங்கள பவுத்த மக்களிலும் நல்லவர்கள் உள்ளனர் சிங்கள பவுத்த மக்களிலும் ஜனநாயக சக்திகள் உள்ளனர் என்பதை ஏன் ஏற்க மறுக்கிறார். தமிழர் ஒற்றுமைக்காக தலித் அல்லாத ஜனநாயக சக்திகளுடன் கூட சொல்லும் திருமா ஏன் மனித ஒற்றுமைக்காக சிங்கள பவுத்த மக்களிடையே உள்ள ஜனநாயக சக்திகளோடு சேர கூடாது.
No comments:
Post a Comment