திராவிடம் தமிழ் தேசியம் ஜாதி ஒழிப்பு பேசிக்கொண்டு இருக்கும் சிலர் சொல்லிக்கொண்டு திரியும் வார்த்தைகள். "கவுண்டனை வெட்டுவோம் கவுண்டச்சியை கட்டுவோம்" "கவுண்ட பெண்கள் எல்லோரும் நல்லவர்கள் அங்குள்ள ஆண்கள் தான் ஜாதி வெறியர்கள்". இது தலித் சமூகத்தில் திராவிடம் தமிழ் தேசியம் ஜாதி ஒழிப்ப ஜாதி மறுப்பு எனும் பெயரில் தொற்றி வரும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே. ஆண்டாண்டு காலமும் ஜாதி வெறி பிடித்த மிருகங்கள் நமது பெண்களை அவர்களது ஜாதி வெறிக்கும் ஆணாதிக்காதுக்கும் பலி ஆக்கியது போல இன்று நமது ஆம்புல புலிகளும் சிங்கங்களும் சிறுத்தைகளும் நமது தலித் பெண்களை பலி ஆடுகளாக்கி வருவதன் வெளிப்பாடே இது. கவுண்டன் மட்டும் கெட்டவன் கவுண்டச்சி நல்லவளா? அல்லது கவுண்டச்சி பெண் என்பதால் அவளை அடக்கி விட முடியும் என நினைக்கிறீர்களா? கவுண்டச்சி பெண் என்பதால் பொதுவில் தமது ஜாதி வெறியை ஆதிக்கத்தை காட்டமாட்டாள் அதனால் வீட்டுக்குள் அவளுக்கு அடங்கி கிடக்கும் அடிமை தனத்தின் வெளிப்பாடா? கவுண்டச்சியை கட்டித்தான் உங்கள் அண்மையையும் வீரத்தையும் காட்ட முடியுமா? நீங்களும் கவுண்ட பெண்களும் நல்லவங்க ஜாதி ஒழிப்பு சீமான்கள் சீமாட்டிகள் கல்யாணம் கட்டி குடும்பம் நடத்தி ஜாதிய ஒழிப்பீங்க, ஆனா கவுண்டன் கெட்டவன் அவன் நம்ம பெண்களை கட்ட மாட்டான், கவுண்டனை வெட்டி விட்டு கவுண்டச்சியை நீங்க கட்டிக்குவீங்க, அப்படியென்றால் இங்க எக்ஸசா உள்ள தலித் பெண்கள் என்ன பண்ணுவாங்க? துறவறத்துக்கு அனுப்புவீங்களா? விபச்சாரம் பண்ண சொல்லுவீங்களா? சின்ன வீடா வச்சுக்குவீங்களா? அல்லது நீங்களும் வன்னிய பெண்களும் சேர்ந்து ஜாதிய ஒழிச்சிட்டு தலித் அல்லாதவர் ஆன பிறகு நமது தலித் பெண்கள் மட்டும் தலித் விடுதலை பேசிட்டு இருப்பாங்களா? சூப்பர் நலலா ஜாதி ஒழிப்பு அரசியல் பன்னுங்க. அண்ணல் சொன்ன மாதிரிதான் எந்த ஒரு சமூகத்திலும் பெண்கள் விடுதலை பெற வில்லை எனில் அந்த சமூகம் விடுதலை பெறாது என்பதே. இன்று சமூக கட்டமைப்பில் உள்ள ஆனதிக்கதின் தாக்கமே இது. இன்றைய சமூக பொருளாதார கட்டமைப்பை பயன்படுத்தி தலித் சமூகத்து ஆண்கள் படித்து வேலை வாய்ப்பை பெற்றுவிட்டு ஜாதியை ஒழிக்கிறோம் வெங்காயத்தை நசுக்குரோம்ன்னு வன்னிய பெண்களை மனந்து ஆணாதிக்க அரசியல் நடத்திக்கொண்டு இருக்கின்றனர். தலித் பெண்கள் இங்கும் பலி ஆடுகளே.
No comments:
Post a Comment