((((((சாதி கலவரத்துக்கு காரணமான விஷமிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதைவிடுத்துவிட்டு வன்னியர்கள் மீது வன் கொடுமை சட்டத்தில் வழக்கு போடுகிறார்கள். ராமதாஸ்))))). இது கலவரமா? கலவம் இல்லை தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை வன்கொடுமை. வீடு கொளுத்திய கொள்ளை அடித்த சேரியை சூறை ஆடிய வன்னியர்கள் மீது வழக்கு போட கூடாதாம். அதற்கு காரணமான விஷ கிருமிகள் மீது வழக்கு போடணுமாம். யார் அந்த விஷ கிருமிகள்......நாங்க என்ன வி சி க கட்சிய சார்ந்த பாலாஜி மேலயும் சென்னையில் உள்ள வன்னியர் சங்க தலைவர்கள் மேல வழக்கு போட சொல்கிறோம். இரண்டாயிரம் குற்றவாளிகள் குற்றம் செய்து விட்டு எந்த வழக்கும் இல்லாமல் திரிந்து கொண்டு இருக்கிறார்கள். 2016 நடக்கும் தேர்தலுக்கு ராமதாஸ் வியுகம் அமைக்கிறார். நாம் மொழி சாகிறது என்றும் ஈழத்தில் மக்கள் சாகிறார்கள் அதனால் ரமதாசுடன் இணைந்து தமிழர் ஒற்றுமையை காப்போம்னு இரு கரம் கூப்பி அழைப்பு கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். சேரி எரியறதுக்கும் சேரி மக்கள் சாகுறதுக்கும் நீதி கேட்டா ஈழத்துக்கு நீதி வாங்க வீடு கொளுத்திகளுடன் கொள்ளைகார கொலைகார கூட்டத்துடன் உறவா? தர்மபுரியை தலித் அரசியல் ஆக்குவோம் தமிழ் தேசியத்தை வேரறுப்போம்.
No comments:
Post a Comment