சூரியன் மேற்கே உதிக்கலாம் ராமதாசுக்கு ஜாதி வெறி இல்லாமல் போகலாம். ஆனால் திருமவால் தமிழ் தேசிய போதையிலிருந்து வெளியே வர முடியாது. தருமபுரி கூட்டதில் இரண்டு கையையும் தூக்கி தமிழ் சமூக ஒற்றுமைக்காக உங்களோடு கை கோர்க்க வருகிறேன் என்று ராமதாசிடம் கேட்கிறார். இவர் தமிழ் தேசியத்துக்காக இங்கு கெஞ்சி கொண்டு இருக்கிறார், ராமதாஸ் அங்கு தெளிவாக தனது ஜாதி இந்து காயய் நகர்த்திக்கொண்டு இருக்கிறார். திருமாவையும் வி சி க வையும் மட்டும் அல்ல ஒட்டு மொத்த தலித் சமூகத்தையும் அவர் குற்றவாளிகளாக காட்டிக்கொண்டு இருக்கிறார். நமக்கு தேவை தமிழ் சமூக ஒற்றுமை இல்லை. சமூக நீதி நமது சமூகத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு சரியான தண்டனை. தமிழக அரசு செவி சாய்க்கவில்லை எனில் மத்திய அரசை அணுக வேண்டியது அவசியம். தற்போது தொடர்ந்து பத்திரிக்கைகள் இதை வெளியிட்டு வருகிறது ராமதாஸ் இதை சரியாக வன்னிய அரசியல் ஆக்குகிறார். தமிழ் தேசியம் பேசிட்டு இருந்தால் நமது மக்களை ஒருங்கிணைக்க முடியாது. தர்மபுரியை தலித் அரசியல் ஆக்குங்கள்.....
No comments:
Post a Comment