இவர்கள் தமிழர்களும் இல்லை சூத்திரர்களும். இல்லை. தமிழர்கள் இந்த மண்ணுக்கு வருவதற்கு முன்னர் இந்த மண்ணில் வாழ்ந்த பூர்வ குடிகள். அவர்களை எதுக்கு தமிழ் தேசியத்தில் சேர்க்கிறீர்கள். அவர்கள் இயற்கையிலேயே உழைக்கும் மக்கள் மானுடத்தை நேசிப்பவர்கள் ஜாதி இனம் மொழி எனும் பேதங்களுக்கு அப்பார்பட்டவர்கள். தமிழ் பேசும் முதலாளிகளை, பண்ணையார்களை, நில உடமையாளர்களை காக்க இந்த மண்ணின் மைந்தர்களை தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை பலி ஆடுகளாக ஆக்காதீர்கள். உழைக்கும் வர்க்கம் உழைக்கும் வர்க்கமாக இருக்கட்டும். முதலில் தமிழ் பேசும் முதலாளிகளிடம் இருந்து நிலம், சொத்து, தொழில் இவைகளில் இவர்களுக்கு பங்கு பிரித்து கொடுத்துவிட்டு அதற்க்கு ஆப்புறம் திராவிட கூட்டத்தையும் அதற்க்கு அப்புறம் இந்திய கூட்டத்தையும் கேள்வி கேட்டுட்டு அதுக்கு அப்புறமா வால்மார்ட்டை கேள்வி கேளுங்க. இல்லை எனில் தமிழியம், திராவிடம், இந்தியம் பேசுவதை விட்டுவிட்டு தலித்தியம் பேசி இந்த மண்ணின் மைந்தர்கள் தங்கள் உரிமையை பெற குரல் கொடுங்கள்.
No comments:
Post a Comment