Monday, November 26, 2012

///மார்க்சிய பெரியாரிய தமிழ் தேசிய வாதிகள் நிலை என்ன.////
இங்க நம்ம நிலையே என்ன என்று தெரியவில்லை. வன்னியரிலும் நல்லவர்கள் உள்ளனர் தேவரிலும் நல்லவர்கள் உள்ளனர் என்று ஒரு கூட்டம் ஸ்டேடஸ் போடுது. நாங்க என்ன இல்லன்னா சொன்னோம். பார்பனர்களில் சிகளவர்களில், தெலுங்கரில், கன்னடரில், வட இந்தியரில், அமெரிகக்ரில் கூட நல்லவர்கள் உள்ளனர். ப ம க வன்னியர் சங்கத்துல கூட நல்ல வன்னியர்கள் இருக்காங்க. நல்ல வன்னியயர்களிடம் கட்சியையும் நாட்டையும்  கொடுத்துட்டு நாம ஈழதுக்கு போயி போராடலாம். நல்ல வன்னியர்கள் எல்லாம் சேர்ந்து ஆட்சி செய்யட்டும்.  நாட்ல நிறைய சேரிகள் எரியும்.


/////////சாதி மறுப்பு திருமணம் கூடாது என சொல்பவர்கள் 
மருத்துவமனையில் இரத்தம் ஏற்றும் போது தன் சாதிகாரன் இரத்தத்தை மட்டும் தான் ஏற்றவேண்டும் என சொல்வார்களா? - கி.வீரமணி. //////// நல்ல கேள்வி. இதையே சிங்களர்கள் கலப்பு திருமணம் செய்து தமிழ் இனத்தை அழிக்கிறார்கள் என்று இன வெறி பிடித்து அலையும் தமிழர்களிடமும் கேட்பாரா? ஆரியர் கலப்பால் திராவிடம் அழிகிறது என ஒப்பாரி வைக்கும் திராவிட கூட்டத்திடம் கேட்பாரா? 


மலையக எழுச்சி இலங்கை வாழ் சாக்கிய தலித் குடிகளின் எழுச்சி....

No comments: