ஜாதி ஒழிப்பு திருமணம் பண்ணிட்டோம் எங்களுக்கு ஜாதி இல்லை. ஆறு மாசம் ஆச்சு ஜாதி இல்லை. குழந்தையும் பிறந்தாச்சு. பிறந்த குழந்தைக்கு ஜாதி இல்லை. இவன் தமிழன் இவன் திராவிடன். அப்புறம். என்னாச்சு. குழந்தைக்கு வயசு அஞ்சு ஆச்சு. இப்ப ஸ்கூல்ல சேக்கனுமே. ஜாதி இல்லை நான் திராவிடன் நான் தமிழன்னு சொன்னா குழந்தை வருங்காலம் போயிடுமே. குழந்தை வருங்காலம் பாதிக்க வேண்டாம் நம்ம ஐயா ஆசிரியர் வீரமணி கூடிய விரைவில் ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு இட ஒதிக்கீடு வாங்கி கொடுத்துடுவார் அது வரைக்கும் BC ஜாதி சான்றிதழ் வாங்கி ஸ்கூல்ல சேத்துடலாம். பையன் படிச்சு முடிச்சிட்டான் ஜாதிய வச்சு வேலையும் வங்கிட்டான். இப்ப முகபுத்தகத்துல எனக்கு ஜாதி இல்லை எங்க அப்பா அந்த ஜாதி எங்க அம்மா இந்த ஜாதின்னு சொல்லிட்டு ஒரே பீத்தலு. இப்ப அவனுக்கு ஜாதி இல்லையாம். அவன் காதல் பண்ணிட்டு இருக்கானாம். அவனும் அவுங்க அம்மா அப்பா மாதிரியே காதலிச்சு கலப்பு திருமணம் பண்ணிக்கிரானாம். இவன் புள்ளைக்கு BC ஜாதி சான்றிதழ் வந்குவானா? இல்லை MBC சான்றிதழ் வாங்குவானா? இன்னா ஊத்து ஊதுறாங்க சாமி இந்த ஜாதி ஒழிப்பு சீர் திருத்த வாதிங்க.
No comments:
Post a Comment