அண்ணல் அம்பேத்கர் வாழும் காலத்தில் காந்தி ஒரு மகாத்மாவாக மகானாக சித்தரிக்கப்பட்டு இருந்தார் பெரும்பான்மை ஜாதி இந்து இந்திய சமூகம் மட்டும் அல்லாமல் அன்றைய தலித் மக்கள் கூட அவரை மகாத்மா என்று நம்பினார்கள் . உலகம் முழுக்க அவர் ஒரு மகாத்மாவாக சித்தரிக்கப்பட்டு இருந்தார். அவரை நமது அண்ணல் தலைகீழாக புரட்டி போட்டார். அவர் உயிருக்காக அண்ணலிடம் அவரும், அவரது மனைவியும், பிள்ளையும் அன்று கை கூப்பி நின்றனர். அவர் "திமிறி ஏழு திருப்பி அடி" என்றெல்லாம் சொல்ல வில்லை. ஆனால் நம்மை ஒரு அரசியல் சக்தியாக ஆக்கினார். அவர் தனி மனிதராக இல்லை நமது அரசியல் பிரதி நிதியாக இருந்தார். காந்தியை மகாத்மா என்று நான் சொல்ல மாட்டேன் அவர் மாமனிதர் இல்லை அவர் ஒரு சீசனல் அரசியல் வாதி என்று வெளிப்படையாக பேசியவர் அண்ணல். ராமதாசை அவரது சமூக மக்கள் கூட மதிப்பது இல்லை. அவர் ஒரு சீசனல் அரசியல்வாதி என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் திருமா அவரை நேரடியாக எதிர்க்கும் சக்தியோ அல்லது அவரை பெயர் சொல்லி அழைக்கும் திராணியோ அற்று இருக்கிறார். ஆனால் எங்கோ இருக்கும் சிங்களவர்களை வென்று தமிழ் தேசியம் வாங்கி கொடுக்கப்போகிறோம் என்றும், மீண்டும் பிரபாகரன் வருவார் ஆயுத போர் நடக்கும் என்றும் வாய் சவாடல் விட்டு கொண்டு இருக்கிறார். இவரது அட்டைகத்தி தமிழ் தேசிய அரசியலுக்கு தர்மபுரியின் சாக்கிய அரசியல் சாவு மணி அடிக்கும்....
No comments:
Post a Comment