Wednesday, November 28, 2012

அருந்ததிய மக்கள் தங்களை சக்கிலியர்கள் என்று சொல்லிக்கொள்வதும் அருந்ததியர்கள் என்று சொல்லிக்கொள்வதும் மதுரை வீரன் பரம்பரை என்று சொல்லிக்கொள்வதும். நாங்கள் சாக்கியர்கள் புத்தனின் வமிசா வழியினர் என்று சொல்லிக்கொள்வதும்  தலித் எழுச்சியின் அடையாளங்களே. அதை சுய ஜாதி பெருமை என்றும் வருணிக்க முடியாது. இன்றைக்கு அருந்ததிய சமூகத்தை சேர்ந்த பலர் நான் சக்கிலியண்டா என்று குரல் கொடுப்பது மிகவும்  அவசியம். பள்ளர் மற்றும் பறையர்களால்  அவர்கள்  வஞ்சிக்கப்ப்படும்போது வன்கொடுமைக்கு ஆளாகும்போது அவர்களை காத்துக்கொள்ளவும் அரசியல் சமூக பொருளாதார் மேம்பாடுகளில் அவர்களுக்கான பங்கு கிடைக்காமல் போகும்போது அந்த உரிமையை பெற அவர்கள் சங்கங்கள் அமைத்து அதை பெறுவதும் மிகவும் அவசியம். அதை சுயசாதி பற்று என்று சிறுமை படுத்த முடியாது. அது போலவே தேவர்களின் ஆதிக்கத்தை எதிர்க்க பள்ளர்கள் மள்ளர்களாக ஒருங்கிணைவதும், வன்னியர்களை எதிர்க்க பறையர்கள் ஒருங்கினைவதும் தலித் எழுச்சியே. இது போல உள்ள நூற்றுக்கணக்கான சாக்கிய சமூகங்களும் தங்களுக்கான உரிமைகளுக்காக தங்களது அடையாளத்துடன் ஒருங்கிணைவது போராடுவது அவசியம்.  சக்கிலியர்களும் பறையர்களும் பள்ளர்களும் தங்களது சுய அடையாளங்களோடும் தேவை படும்போது சாக்கியா (தலித்) எனும் பொது அடையாளத்துடனும் போராடுவது இன்றியமையாதது. சாக்கியா (தலித்) அடையாளத்தை விட்டு விட்டு தமிழ் அல்லது இந்து அல்லது திராவிட அல்லது இந்திய அடையாளத்துக்குள் வந்து விடு என்று ஜாதி இந்துக்கள் கேட்பது போலத்தான் சக்கிலியர், பறையர், பள்ளர் எனும் அடையாளங்களை விட்டு விட்டு சாக்கியா (தலித்) அடையாளத்துக்குள் வந்து விடு என்பதும். சக்கிலியர், பறையர், பள்ளர் மூவரும் சமமாக மாறும்போது அவர்களாகவே ஒற்றை அடையாளத்துக்குள் வருவார்கள் அதுவரை அவர்கள் தங்களுக்கான அடையாளத்துடன் தங்கள் சமூக உரிமைகளுக்காக போராட வேண்டி உள்ளது. சக்கிலியர்களின் உள் இட ஓதிக்கீட்டு போராட்டமும். அந்த உள் இட ஓதிக்கீட்டில் சரியான விகிதாச்சாரம் இல்லை என்கிற பறையர்களின் குரலும் தலித் அரசியலின் கூறுகளே. சாக்கிய சமூகத்தில் உள்ளவர்கள் தங்களை பள்ளர், பறையர், சக்கிலியர் என்று சொல்லிக்கொண்டு வெளியே வருவதை ஆதிக்கத்தை அதிகாரத்தை அநீதியை எதிர்க்க கொடுக்கும் குரலாகத்தான் பார்க்க வேண்டுமே ஒழிய அதை சுய ஜாதி பெருமையாக பார்க்க முடியாது. இதே லாஜிக் சூத்திரர்களின் எழுச்சிக்கும் பொருந்தும். வன்னிய சங்கம் தொடங்கிய போது ராமதாஸ் வன்னியர் ஒட்டு அன்னியருக்கு இல்லை என்று சொன்னார். அன்று அந்த குரல் தலித்துக்களுக்கு எதிரான குரல் இல்லை. திராவிட அரசிலை திராவிடம் எனும் பெயரில் வன்னியர் அல்லத பிற சமூக மக்களின் ஆதிக்கத்தை எதிர்த்த குரல். ஆனால் மெல்ல திராவிடத்தை எதிர்க்க ஆரம்பித்த வன்னியர் சங்கம்  தலித் மக்களுக்கு எதிரான முகத்தை காட்டியது. சூத்திர வன்னியர்கள் தங்களை ஷத்திரியர்கள் என்று அழைத்துக்கொண்டு சூத்திர பட்டத்தை கீழ் ஜாதி பட்டதை சாக்கிய மக்கள் மீது தினித்ததும்தான் வன்னியர்களின்  ஜாதி வெறி அரசியல். அது போல பறையர்கள் பள்ளர்கள் சக்கிலியர்கள் தங்களை சூதிரர்கள் ஷத்திரியர்கள் எங்களை மற்ற சாக்கிய மக்களோடு இனைத்து பேசாதீர்கள் அது எங்கள் கவுரவத்துக்கு இழுக்கு நாங்கள் உயந்த ஜாதி அவர்கள் தாழ்ந்த ஜாதி என்று பேசிக்கொண்டு இருந்தால் அது சுய ஜாதி பெருமை. அதே சமயம் சாக்கிய அடையாளங்களை ஜாதி அடையாளங்களாக ஆக்காமல் மக்களை ஒருங்கிணைத்து ஆதிக்க அதிகார வர்க்கத்தை எதிர்க்க பயன்படுத்துவது சாக்கிய (தலித்) அரசியல். சும்மா பறையன்னு சொல்லாதே பள்ளன்ன்னு சொல்லாதே சக்கிலியன்னு சொல்லாதே என்பதெல்லாம் சாக்கியர்களின் எழுச்சியை ஒடுக்க ஹிந்துத்துவ கூட்டமும்  திராவிட தமிழ் தேசிய கூட்டமும் நடத்தும் ஆதிக்க அரசியலே. பறையர் பள்ளர் சக்கிலியர் என்பது ஜாதிகள் அல்ல அவைகள்  ஜாதி அற்ற பழங்குடி சமூகங்கள். சாக்கிய மக்களை ஒருங்கிணைக்க இந்த அடையாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தொடர்ந்து இந்த அடையாளங்களின் மீது ஒரு குற்ற உணர்வை, கீழானது எனும் உணர்வை ஏற்படுத்தி, இது சுய ஜாதி அடையாளம் எனும் முத்திரை குத்தி சாக்கிய அரசியலை மட்டுப்படுத்துவதும்  நம்மை ஒடுக்குவதும்தான் ஹிந்துத்துவ திராவிட தமிழ் தேசிய அரசியல்.


















No comments: