Friday, November 23, 2012

"அவுங்க சின்னத்துலே நின்னு ஜெயிக்கரவங்களுக்கு பெயர்தான் பினாமி. இரட்டை இல்லை சின்னதில் நின்னு ஜெயிக்கிறார்கள் பாருங்கள் தலித்துக்கள். சொந்த சின்னதில் நிற்பதர்க்கு  கூட துணிசல் ஆற்றவர்கள் தமிழகத்தில் தலித் மக்களுக்கு தலைமை தாங்குகிறார்கள்." யாரோ ஜாதி இந்து தமிழர் ஒட்டு மொத்த தலித் இயக்க தலைவர்களையும் கொச்சை படுத்துவது போல திருமா பேசிக்கொண்டு இருக்கிறார். ராமதாஸ் ஒட்டு மொத்த  தலித் மக்களையும் பண்பற்றவர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்று பேசுவது போல இருக்கிறது இது. நான் பறையன் இல்லை நான் தலித் இல்லை நான் தமிழன் நான் கட்சி ஆரம்பிக்கும்போதே பறையர் சங்கம் என்றோ தலித் சங்கம் என்றோ ஆரம்பிக்கவில்லை எனும் இவர். தலித் தலைவர்களை பினாமி தலிவர்கள் என்றும் துணிச்சல் அற்றவர்கள்  என்றும் சொல்கிறார். தமிழன்கள் இவரை துரோகி துரோகி என்று தூற்றினாலும் நான் உங்களுக்கு பணியாற்றிக்கொண்டே இருப்பேன் என்று அவர்களிடம் வீழ்ந்து கிடக்கும் இவர் ஒட்டு மொத்த தலித் தலைவர்களும் துணிச்சல் அற்றவர்கள் என்கிறார். இதை ஒரு தலித்தாக பறையராக சொன்னால் நமக்கு நம்ம ஆள்தானே சொல்கிறார். மற்றவர்கள் எல்லாம் சரியான தலைவர்கள் இல்லை நான் தான் தலித் மக்களின் சிறந்த தலைவர் சரியான தலைவர் என்று இவரின் பேச்சை ஒரு விமர்ச்சனமாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் தன்னை நான் ஒரு பறையன் இல்லை தலித் இல்லை எனது இயக்கம் பறையர்களின் இயக்கம் இல்லை தலித்துக்களின் இயக்கம் இல்லை நான் தமிழன் எனது இயக்கம் தமிழர்களுக்கான இயக்கம் எனது இயக்கம் பிரபாகனின் விடுதலை புலிகள் அமைப்பை முன்னோடியாக கொண்டு உருவாக்கப்பட்டது  என்று சொல்லிக்கொள்ளும் இவர் தலித் தலைவர்களை கொச்சை படுத்திக்கொண்டு இருக்கிறார். இவர் வணங்கும் பிரபாகரனை போல நமது தலைவர்கள்  கொலைகாரர்களும் இல்லை கருனாநிதி போல ஊழல் பெருச்சாளிகளும் இல்லை.





No comments: