Wednesday, November 28, 2012

மாவீரர் தினத்துல அண்ணன் "நாம" "நமது மக்கள்" அப்படின்னு பேசிட்டு இருந்தாரு. யாரை இவ்வளவு நெருக்கமா "நாம்", "நமது", "நம்முடைய" அப்படின்னு பேசிட்டு இருக்கார்னு காது கொடுத்து கேட்டேன். அவர் அவருடைய தமிழ் சொந்தங்களை பற்றி பேசிட்டு இருந்தாரு. 7.5 கோடி தமிழ் நாட்டு தமிழர்களும் 15 கோடி உலக தமிழர்களும் அவருக்கு சொந்தமாம். இவரு பேசுவதை கேட்கும் போது சீமான் பேசுவதும் அவரை காப்பி அடித்து "நாம் தமிழர்கள்" பேசுவதும் நினைவுக்கு வந்தது அப்படியே கழுதை சுளுக்கி கையை நீட்டி மன நோயாளிகள் வலிப்பு வந்தவர்கள் "என் அருமை தமிழ் சொந்தங்களே" அப்படின்னு பேசுவது போல. யாருக்கு யார் சொந்தம். குச்சி கொளுதிகள், ஊடு கொளுத்திகள், மரம் வெட்டிகள், கொள்ளை கூட்டம், குடி கெடுத்திகள், குற்ற பரம்பரையினர் எல்லாம் நமக்கு சொந்தங்களா? சீமான உடுங்கப்பா அது காமடி பீசுன்னு நமக்கு தெரியும்.  ஆனா நமது அண்ணன் "நாம்" "நமது மக்கள்" "நமது சொந்தங்கள்" "நமது உறவுகள்" "உலக தமிழ் சமூக ஒற்றுமை" "உலக தமிழ்ச் சமூக விடுதலை" அப்படின்னு பேசிட்டு இருந்த போது தான், ரொம்ப காமடியா இருந்தது;  கொஞ்சம் தலைய சுத்துச்சு; வீடு எரியும்போது யாரோ மத்தளம் வாசிச்சிட்டு இருந்தது போல இருந்தது. வெளிய நமது சொந்தங்கள் தர்மபுரியிலும் கடலூரிலும் வீடுகளை இழந்து புள்ளையும் குட்டியுமா நடுத்தெருவில் நின்று கொண்டு இருகிறார்கள்  ஆனால் இவர் உள்ளே மாவீரர் தினம் என்று கொள்ளை கூட்டத்துடன் உறவுமுறை பேசிக்கொண்டு இருக்கிறார். என்ன பாசம்? என்ன உணர்வு? திருமா எப்பவாச்சும் இப்படி நமது மக்களை உறவு கொண்டாடி இருக்கிறாரா? நமது மக்கள் என்று நம்மை சொந்தம் கொண்டாடி இருக்கிறாரா? அப்படி சொல்லும் நம்மை ஜாதியவாதிகள் என்று கொச்சை படுத்திக்கொண்டு இருக்கிறார்? அவர் என் உயிரினும் மேலான விடுதலை சிறுத்தைகள் என்று சொல்லும்போது அவர் பறையர்களை சொல்லுகிறார் சாக்கிய (தலித்) மக்களை சொல்லுகிறார் என்றெல்லாம் ஒரு காலத்தில் நான் நினைத்தது உண்டு. பிறகுதான் தெரிந்தது அவர் பறையர்களை சாக்கிய (தலித்) மக்களை சொல்ல வில்லை தனது கட்சிக்காரர்களை சொல்லுகிறார் என்று. தனது கட்சியில் உள்ள பாலாஜி போன்ற "நல்ல" வன்னிய உறவுகளை சொல்லுகிறார் என்று. அவர் தருமபுரியில் பேசும்போது திராவிட இயக்க ஜாதி தமிழர்கள்  எப்படி கழிவிரக்கத்தோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கிறார்களோ அதுபோலத்தான் அவர் குரல் இருந்தது. அது நமது குரலாக நமது  பிரதிநிதியின் குரலாக இல்லை. நம்மில் ஒருவராக நமது குரலை நமக்காக கொடுக்கும் வல்லமை கொண்ட பிரதிநிதிகளை அடையாளம் காணுவோம்.













     

No comments: