அறுபதுகளில் இருந்த ஆதி திராவிடர் இயக்கங்கள் எல்லாம் திராவிட இயக்க பேரலையால் சூறையாடப்பட்டது. ஆதி திராவிடர் இயக்கத்தில் மிக முன்னோடிகலாக இருந்த அன்னை சத்தியவாணி முத்து போன்றவர்கள் கூட திராவிட அரசியல் சாக்கிய மக்களுக்கு விடுதலை வாங்கி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் அதில் இணைந்தனர். அறுபதுகளில் சென்னை பறையர்களின் கோட்டையாக இருந்தது. தி மு க பறையர்களை நம்பியே உருவானது. ஆனால், மிக குறுகிய காலதிலேயே மக்கள் திராவிட சூத்திர அரசியலை புரிந்து கொண்டு மீண்டும் ஆதி திராவிட இயக்கங்களை கட்டமைக்க ஆரம்பித்தனர். எண்பதுகளில் அது புதிய பரிமாணத்தை பெற்று அண்ணல் அம்பேத்கர் பெயரில் இயக்கங்கள் தோன்ற ஆரம்பித்தன. அண்ணலின் பெயரில் இயக்கங்கள் தோன்றிய போது அது திராவிட இன மொழி அரசியலுக்கு எதிராக இருந்தது. அண்ணல் அம்பேத்கரின் பெயரில் தோன்றிய அந்த இயக்கம் சமூக நலனை முன்னிருத்தி இருந்தது. ஒவ்வொரு சேரிகளிலும் அண்ணல் அம்பேத்கர் பெயரில் மன்றம், விளையாட்டு மைதானம், இரவு பாடசாலை, தற்காப்பு கலைக்காக பாக்ஸிங் கிளப், கராத்தே பயிற்சி மையம், கேரம் விளையாட்டு, சிறு நூலகங்கள் என்று அது தலித் மக்களின் வளர்ச்சி முன்னேற்றம் இவற்றை கருத்தில் கொண்டு இயங்கியது. இனறைக்கு இருப்பது போல ஆடம்பர தலைவர்கள் அங்கு இல்லை என்றாலும் அது மக்கள் இயக்கமாக பறந்து விரிந்து இருந்தது. இன்று இருக்கும் வசதி வாய்ப்பும் அன்று இல்லை என்றாலும் ஓலை கொட்டகைகளில் அன்று மன்றங்கள் நிறுவப்பட்டது. அந்த மன்றங்களில் இன்று இருப்பது போல ராமசாமியும் பிரபாகரனும் இல்லை மாறாக சமூகத்திற்கு உழைத்த நமது முன்னோடிகளின் படங்கள் இருந்தன. அண்ணல் அம்பேத்கர் மன்றத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் சமூக பொறுப்பு உள்ளவர்களாக இருந்தனர். தாங்கள் மெத்த படிக்கவில்லை என்றாலும் தங்கள் வருங்கால சமூகம் படிக்க வேண்டும் என்று தனது சமூக மக்களுக்கு கல்வியின் அவசியத்தை பரப்பினர். ஒவ்வொரு மன்றமும் சாக்கிய மக்களின் சமூக கூடமாகவும் பஞ்சாயத்தாகவும் விளங்கியது. தனி மனித பிரச்சனைகளை குடும்ப பிரச்சனைகளை தீர்க்கும் மையமாக விளங்கியது. அந்த மன்றங்களில் பொறுப்பில் இருந்தவர்கள் சுய கட்டுப்பாடு உள்ளவர்களாக இருந்தனர். சுய கட்டுப்பாட்டை மீறியவர்கள் விமர்சிக்கப்பட்டனர், மன்றத்தின் பதவிகளில் இருந்தும் உறுப்பினர் தகுதியில் இருந்தும் நீக்கப்பட்டனர். அண்ணலின் பெயரில் நடக்கும் இந்த மன்றங்களில் உறுப்பினர்களாக் உள்ளவர்கள் குடிக்க கூடாது, திருட்டு தொழிலில் ஈடு படக்கூடாது, பெண்களை கேலியோ கிண்டலோ செய்ய கூடாது என்று அறிவுரைகள் வழங்கப்பட்டது. சேரியில் எவரேனும் தவறு செய்து விட்டால் போலிஸ் பிடித்து போனாலும் சட்டப்படி தண்டனை கொடுக்க வேண்டுமே ஒழிய அவர்களை கொடுமை படுத்த கூடாது, குற்றம் செய்யும் பெண்களை பாலியல் கொடுமை படுத்தக்கூடாது என்று அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தது. சந்தேகம் என்று பிடித்து சென்று போலிஸ் நடத்திய வெறியாட்டத்தை அது தடுத்தது. சமூகத்தில் புரையோடி போயிருந்த ஒழுக்க கேடுகளை இந்த மன்றங்கள் தடுத்தன. சேரிகளில் இருந்த சாராய கடைகளை நொறுக்கினர். சேரிக்கு சாராயம் குடிக்க வந்த ஜாதி இந்துக்களை அடித்து விரட்டினர். சேரி பெண்களை பாலியலில் ஈடு படுத்த முயன்ற ஜாதி இந்து கயவர்களை ஒடுக்கினர். ஒரு காலத்தில் கோடம்பாக்கம் என்றாலே சினிமா துறை விபச்சாரம் என்று ஆகிக்கொண்டு இருந்தது. என்பதுகளில் கோடம்பாக்கம் அண்ணலின் சிலை பக்கம் ஆறு மணிக்கு மேல் போய் பார்த்தால் பெண்கள் தலை நிறைய மல்லிகை பூ வைத்துக்கொண்டு சுத்திக்கொண்டு இருப்பார். சென்னையில் பல இடங்களில் இருந்து வரும் ஆண்கள் அவர்களை மொய்த்துக்கொண்டு இருப்பார். அந்த இடத்தில் அண்ணலின் பெயரில் மன்றம் வந்த பிறகு அங்கு விபச்சாரத்திற்கு வந்த ஆண்களை அடித்து விரட்டியது காமத்திபுரமாக மாற இருந்த கோடம்பாக்கத்தை தடுத்தது அன்றைய அம்பேத்கர் மன்றங்களின் சாதனைகளே. அம்பேத்கர்வாதிகள் என்றாலே சாக்கியத்தை பின்பற்ற வேண்டும் ஒழுக்கம் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும் என்று பரப்பப்பட்டு வந்தது. அன்றைய அந்த அம்பேத்கர் இயக்கத்தை ஒழிக்க ஜாதி இந்துக்களால் பரப்பப்பட்டதுதான் இந்த தமிழ் தேசிய இயக்கம். திராவிடத்தை விட்டு விலகி கொண்டு இருந்த அதை எதிர்க்க ஆரம்பித்த சாக்கிய மக்களின் இயக்கத்தை அழிக்க திட்ட மிட்டு ஊட்டியது தான் இந்த தமிழ் தேசிய உணர்வு. தமிழ் தேசிய உணர்வு என்பதே சாக்கியத்தை வட நாட்டு இயக்கமாகவும் அண்ணலை வடநாட்டுக்காரராகவும் காட்டும் திட்டமே. என்பதுகளில் அதை எதிர்த்த நமது மக்கள் மெல்ல அதை உள்வாங்க ஆரம்பித்தனர் அதற்கு மிகவும் முக்கிய காரணம் திருமா எனும் தலித்துக்கு பயிற்சி அளித்து நமது இயக்கத்தின் உள் அனுப்பியதுதான். திருமா உள்ளே வரும்போதே நாம் அதை எதிர்த்தோம் அது சிறுத்தை அல்ல சிறுத்தை போர்வையில் உள்ள புலி என்று மக்களை எச்சரித்தோம் மக்கள் கேட்கவில்லை அவரது பேச்சு அரசியலுக்கும் போஸ்டர் அரசியலுக்கும் விளம்பர அரசியலுக்கும் மயங்கி மக்கள் அவர் பின்னால் ஓடினார்கள். இன்னும் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். திருமா எப்போதுமே தமிழ் தேசிய வாதிதான் அவருக்கு தலித் தலித்தியம் சாக்கியம் என்பதெல்லாம் ஊறுகாய்தான். அவர் படிக்கும் காலத்தில் இருந்து இன்றுவரை அவருக்கு மூச்சுக்கு முந்நூறு முறை ஈழத்தின் நினைப்புதான். நம்மை போன்றவர்களுக்கு மூச்சுக்கு முந்நூறு முறை சேரியை பற்றிய நினைப்பு. இன்று அவரோடு மிகவும் நெருக்கமாக வி சி க வில் உள்ள ரவிகுமார், சிந்தனை செல்வன், சன்னா போன்றவர்கள் ஒரு காலத்தில் முழுக்க முழுக்க அம்பேத்கரியம், தலித்தியம், திராவிட சூத்திர எதிர்ப்பு பேசிக்கொண்டு இருந்தவர்கள். ஆனால், இன்று அவர்கள் எல்லோரும் இந்த தமிழ் தேசிய சூறாவளியில் சிக்கி இருப்பதுதான் ஆச்சரியம். ஒரு காலத்தி அண்ணலின் வழியை ஏற்று சாக்கியத்தை நோக்கி போனவர்கள் வழி தடுமாறி தமிழ் தேசியத்தை ஏற்று சாக்கடைக்குள் போய்க்கொண்டு இருக்கிறார்கள். அன்றைக்கு அண்ணல் அம்பேத்கரை நெஞ்சில் சுமந்து கொண்டு கையில் புத்தகம் வைத்துக்கொண்டு திரிந்தனர் நமது இயக்க இளைஞர்கள். பஞ்ச சீலத்தையும் சாக்கியத்தையும் சமூகத்தையும் பேசிக்கொண்டு இருந்தனர். இன்று நாம் எதை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறோம் என்று யோசியுங்கள். நாம் நல்லவர்களாக இருந்தாலும் நம்மை தூற்றும் இந்த ஜாதி வெறி சமூகம் என்பது வரலாறு அதே சமயம் நாமும் எந்த அடையாளத்தை தூக்கி பிடிக்கிறோம் என்பதே நம்மை நெஞ்சை நிமிர வைக்கும். அண்ணல் அம்பேத்கரையோ பகவான் புத்தரையோ வண்முறையளர்கள் தீவிர வாதிகள் என்று யாராலும் சொல்ல முடியாது. அவர்களின் வழி ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் மக்களை நெறிப்படுத்தும் வழி. நாம் அவர்களை விட்டு விட்டு இன்று பிரபாகரனை நெஞ்சில் சுமந்து கொண்டு திரிகிறோம். நம்மை ஏதோ கொலைகார கொள்ளைகார் கும்பல் போல உலகிற்கு காட்டிக்கொண்டு இருக்கிறோம். ஏதோ பிரபாகரன் வழியில் தமிழ் தேசிய புலி அண்ணன் திருமா திமிரி எழுந்ததாலும் திருப்பி அடித்ததாலும் தான் நாம் இன்று இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்தோம் என்று பொய் பரப்பப்பட்டு வருகிறது. உண்மை அதுவல்ல ஆயிரம் ஆயிரம் தலைவர்கள் ஜனநாயக ரீதியில் அண்ணலின் வழியில் உழைத்ததனால் வந்த வளர்ச்சியையே முன்னேற்றத்தையே நாம் இன்று அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம். வாழ வழியில்லாம் சாப்பிட கஞ்சி இல்லாமல் உழைத்த எத்தனையோ தலிவர்கள் நமது சமூகதில் இருந்தார்கள் இன்னும் இருக்கிறார்கள். பவுத்தபெரியார் மு சுந்தரராசனாரை அவர் வாழ்ந்த குடிசையில் எத்தனயோ முறை சந்தித்து இருக்கிறோம். வந்தவர்களுக்கு அவரால் ஒரு கப் டீ கூட வங்கி கொடுக்க முடியாது. பார்க்க போகும் நாங்கள் அவரை கூப்பிட்டு போய் டீ வாங்கி கொடுப்போம். அவர் போன்ற தலைவர்களின் உழைப்பு உணர்வுகளை நேரில் பார்த்து உள்ளோம். அவர்களின் மடியில் வளர்ந்ததால் இன்னைக்கு பலர் ஆயிரம் தொண்டர்கள் சமூக உணர்வோடும் ஒழுக்கம் மிக்கவர்களாகவும் தியாகம் நிறைந்தவர்களாகவும் வாழுந்து வருகின்றனர். அரசியல் மட்டும் பேசாமல் பண்பாட்டையும் பேசிக்கொண்டு அற வழியில் அன்பு வழியில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். பரம்பரை பரம்பரையாக குற்ற பரம்பரையாக இருந்த கூட்டம் நம் மக்களுக்கு எதிராக கொள்ளை கொலை பாலியல் வன்கொடுமைகளை செய்து வந்த கூட்டம். இன்று நமது மக்களை பார்த்து குடிகாரர்கள், பொம்பளை பொறுக்கிகள், கட்டை பஞ்சாயத்து செய்பவர்கள், அவர்கள் பகுதிகளில் எங்கள் பெண்களால் போக முடியவில்லை என்று நம்மை தூற்றிக்கொண்டு இருக்கிறது. தமிழ் தேசிய சாக்கடையை பிரபாகனின் வண்முறை கலாச்சாரத்தை தூக்கி எரிந்து விட்டு அண்ணலின் வழியில் சாக்கியத்தின் அடிப்படையில் நமது இயக்கத்தை கட்டமைக்க வேண்டிய அவசியத்தில் நாம் உள்ளோம். ஜெய் பீம்!
குறிஞ்சி கொத்தவரங்கான்னு கோனார் தமிழ் கதைகள் சொல்ல கூடாது. தமிழகம் முழுக்க மலை குகைகள் கட்டி அங்கு தனது வரலாற்றை பாலி மொழியில் பதிந்துள்ள சாக்கிய பறையர்களின் வரலாற்றை சொல்லிக்கொண்டு இருக்கிறேன்...
சங்க காலத்து தமிழ் அரசன் எவனாச்சும் இருந்தன்னு எதாவது ஆதாரம் இருக்கா? அது என்ன முதல் இடை கடை சங்கம் .....இதுக்கு சம்ஸ்கிருத புரானங்களே மேல்...
குறிஞ்சி கொத்தவரங்கான்னு கோனார் தமிழ் கதைகள் சொல்ல கூடாது. தமிழகம் முழுக்க மலை குகைகள் கட்டி அங்கு தனது வரலாற்றை பாலி மொழியில் பதிந்துள்ள சாக்கிய பறையர்களின் வரலாற்றை சொல்லிக்கொண்டு இருக்கிறேன்...
சங்க காலத்து தமிழ் அரசன் எவனாச்சும் இருந்தன்னு எதாவது ஆதாரம் இருக்கா? அது என்ன முதல் இடை கடை சங்கம் .....இதுக்கு சம்ஸ்கிருத புரானங்களே மேல்...
No comments:
Post a Comment