ஈழம் இலவங்கா என்று நம்மிடயே பேசும் அரசியல் வாதிகளை அடித்து விரட்டுங்கள். போதும் அடுத்தவனுக்கு உழைத்து உழைத்து வெந்தது போதும். நாம் நமக்காக உழைப்போம். ஈழத்தில் தலித்துக்கள் உள்ளனரே எனும் சொந்தங்களுக்கு சொல்லுங்கள். நமது வழியே அவர்களுக்கும் வழி. உ பி வழியில் நாம் போகிறோம். நம் வழியில் அவர்கள் போகட்டும். உ பி யில் உள்ள தலித் நமக்கு என் குரல் கொடுக்கவில்லை என நாம் கேட்கவில்லை ஏனெனில் அவர்களும் நம்மை போலவே அங்கு வெந்து கொண்டு இருக்கிறார்கள். நாம் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று ஈழ தலித மக்கள் கேட்க மாட்டார்கள். அவர்களுக்கு தெரியும் நாம் இங்கு வெந்து கொண்டு இருக்கிறோம் என்று. ஈழத்து தலித்துக்குள் கேட்பதெல்லாம். நாங்கள் இங்கு ஜாதி தமிழர்களை எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கிறோம் நீங்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் அவர்களுடன் கை கோர்த்து திரிகிறீர்களே என்றுதான்.
No comments:
Post a Comment