Thursday, November 29, 2012

மேலே நான் சொல்வது நானே கற்பனை பண்ணி சொன்னது அல்ல இதுவும் அண்ணல் சொன்னவைகளில் இருந்து எடுத்ததே. அடுத்து நீங்க சொல்ற மாதிரி நடக்கும். அது வெளிப்படையா நடக்கணும். அரசியல் கட்சிகள் இல்லாமல் ஜாதி சங்கங்கள் அதை செய்யணும். செய்யும் என்பது எனக்கும் தெரியும். அதன் பிறகு நாம் அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த கோரிக்கையை அரசிடம் வைப்போம். அதாவது சாக்கிய சமூகத்தில் பிறந்த சாக்கிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே ரிசர்வ் தொகுதிகளில் நிற்க முடியும் அவர்கள் தான் உண்மையான சாக்கிய  பிரதிநிதிகள் என்று எலக்சன் கமிஷனை நிர்பந்த படுத்த வேண்டும். இல்லையேல் எங்களுக்கு இரட்டை வாக்குரிமை கொடுங்கள் என்று கேட்க வேண்டும். கல்வி வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு பெறுவதற்கும் அரசியல் ஆட்சி அதிகாரத்துக்கு பிரதி நிதியாக இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. உண்மையான பிரதி நிதி என்பவன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 

No comments: