Saturday, November 24, 2012
அண்ணன் திருமா களப்பணி செய்து மேடைக்கு மேடை தமிழியம் பேசி மூச்சுக்கு மூச்சு பிரபாகரனை பேசி தூங்க வைத்த தலித் உணர்வுகளை தட்டி எழுப்பிக்கொண்டு இருக்கிறோம். உங்களால் முடிந்தால் எதிர்விமர்சணம் செய்யுங்கள். நாங்கள் அபாண்டமாக ஏதாவது அவர் மீது தனிப்பட்ட குறைகளையோ குற்றங்களையோ சொனால் அதை கண்டியுங்கள். இங்கு திருமா தமிழ் தேசியம் பேசுவதை ஒழிக்காமல் தமிழ் தேசிய அரசியலை ஒழிக்க முடியாது. தமிழ் தேசிய அரசியலை ஒழிக்காமல் தலித் அரசியலை கொண்டு வர முடியாது. எந்த ஒரு கருத்தியலும் கொள்கையும் தலித் மக்கள் எடுக்கும்போது அது வீரியமூட்டப்படுகிறது. அது தலித் மக்களின் குரலாக ஒலிக்கிறது. தமிழ் தமிழன் தமிழ் தேசியம் எனும் உணர்வுகளில் சிக்கி உள்ள நமது மக்கள் யாரை எதிப்பது யாருக்கு எதிராக போராடுவது என்றே புரியாமல் விழித்துக்கொண்டு இருக்கிறார்கள். நூறு வருடத்துக்கு முன்னர் இந்து எனும் அடையாளம் நம்மீது அப்படித்தான் திணிக்கப்பட்டது. நமக்கான அடியாளம் நமக்கான அரசியல் மட்டுமே நம்மை விடுவிக்கும். சாக்கியம், பவுத்தம், தம்மம், அம்பேத்கரியம் எல்லாம் பறையர்களின் தலித் மக்களின் விடுதலைக்கு பயன் படும் எனில் அதை கையில் எடுப்போம் இல்லை எனில் அதை தூக்கி போடவும் தயார். நமக்கு மதம், இனம், மொழி, ஜாதி முக்கியம் இல்லை பறையர் விடுதலை தலித் விடுதலை மக்கள் விடுதலையே முக்கியம். ஆயிரம் ஆண்டுகள் நாமும் தமிழ் பேசினோம் வன்னியனும் தமிழ் பேசினான் அது நம்மை இனைத்ததா? நாமும் அவனும் ஒரே சாமியைதான் கும்பிட்டோம் அது நம்மை இனைத்ததா? சாக்கியம் எனும் மானுட தம்மம் தான் நம்மை இணைக்கும் நம்முடன் வன்னியர்களையும் இணைக்கும். மானுடத்தை நாமும் ஏற்போம் அவனையும் ஏற்க வைப்போம் என்பதே பண்பாட்டு கலாச்சார புரட்சி. அரசியலில் நானும் நீயும் ஒன்னு என்று அரசியல் செய்ய முடியாது. நீயும் நானும் ஒன்னு என்றாலும் வாயும் வயிறும் வேறு. அது போல வன்னியனும் நாமும் மனிதன் என்றாலும் வண்ணியர் ஆளும் வர்கமாகவும் நில உடமை சமூகமாகவும் உள்ளனர். தங்களை ஆண்ட பரம்பரை ஆதிக்க ஜாதிகள் என்று எக்காளமிட்டு திரிகின்றனர் அதை எதிற்கும் வல்லமை உள்ள அரசியல் இயக்கமும். நமக்காக நமது உரிமைகளுக்காக சமூக நீதிக்காக எதிர்த்து கேட்கக்கூடிய வல்லமை பொருந்திய தலைமையும் தேவை. நமது அரசியல் இயக்கம் என்பதும் நமது தலைமை என்பதும் நமக்கான பிரதிநிதியாக நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒன்றாக இருக்க வேண்டும் அந்த கருத்தியல் சிந்தனை உணர்வு ஆக்க பூர்வமாக செயல்படுத்தக்கூடிய நிர்வாக திறமை அனைத்தும் சிவகாமி அம்மா அவர்களிடம் உள்ளது என்பதால் அவர்களை ஆதரிக்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment