அண்ணன் திருமா சொல்றாரு தருமபுரியில் நடந்த வன்முறைக்கு பிறகு பஸ்ஸில் கல் எறிந்தவர்கள் தறுதலைகலாம் அவர்கள் சிறுத்தைகள் இல்லையாம். உணர்ச்சி கொந்தளிப்பால் ஆத்திரத்தால் பழி உணர்வோடு பஸ்ஸில் கல் எறிந்தவர்கள் பாதிக்கப்பட்ட நம் இன மக்களாக இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியவர்களே. வன்முறைக்கு வன்முறை என்பது சாக்கிய கலாச்சாரம் இல்லை. பழிக்கு பழி ரத்தத்துக்கு ரத்தம் என்பது அண்ணல் நமக்கு காட்டிய வழி அல்ல. "திருப்பி அடி" என்பது நமது கோஷம் அல்ல. ஆனால் இதே மனித மாண்பு சாமி கும்பிட வந்த தமிழர்களை சிங்களவர்கள் என்று நினைத்து தமிழ் இன வெறியர்கள் தாக்கியபோதும் இருந்திருந்தால், அவர்களையும் இதே போல கண்டித்து இருந்தால் அவரை பாராட்டி இருக்கலாம். ஆனால் அது தமிழர்களின் உணர்ச்சி வெளிப்பாடு பதிக்கப்பட்ட மக்களின் உணர்வு என்று நியாயம் சொன்னார். அதுபோலத்தான் அவரது புலி ஆதரவும் புலிகளின் வன்முறை ஆதரவும். பறையனாக செய்தால் அவர்கள் தறுதலைகள் தமிழர்களாக செய்தால் அவர்கள் உணர்வாளர்களா? தமிழனாக இருந்து பார்த்தல் எங்கள் உணர்வும் வேதனையும் புரியாது பறையனாக இருந்து பார்த்தால் புரியும்.....
No comments:
Post a Comment