இந்தியாவில் இப்போது இருக்கும் தொகுதிகள் தனி தொகுகள் அல்ல அவை ரிசர்வ் தொகுதிகள். பட்டியல் இனத்தை சார்ந்தவர்கள் போட்டியிட ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள். இந்த ரிசர்வ் தொகுதிகளில் நின்று வென்று எம் எல் ஏ ஆனவர்கள் சாக்கியர்கள் என்றாலும் அவர்கள் சாக்கிய மக்களின் பிரதிநிதிகள் அல்ல. சாக்கிய மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சாக்கிய மக்களும் ஜாதி தமிழர்களும் சேர்ந்து ஒட்டு போட்டு வென்றவர்கள். அவர்கள் அந்த தொகுதியின் எல்லா பிரஜைகளுக்கான பிரதிநிதிகள். திருமா எப்படி தனது கட்சியை பொது கட்சி ஆக்கி ஜாதி தமிழர்கள் தயவை தேடிக்கொண்டு இருக்கிறாரோ அதோ போலத்தான், இந்த ரிசர்வ் தொகுதிகளில் நின்று வென்ற சட்ட மன்ற உறுப்பினர்களும் அடுத்த தேர்தலில் எப்படி ஜாதி தமிழர்கள் ஓட்டை வாங்குவது என்பதிலே குறியாய் இருக்கிறார்கள். அண்ணலும் தாத்தாவும் இரட்டை மேஜை மாநாட்டில் கேட்டது தனி தொகுதி (செபரேட் எலக்டரெட்). சாக்கிய மக்கள் தாங்கள் மட்டுமே ஓட்டு போட்டு தங்களுக்கான பிரதிநிதிகளை தேர்ந்து எடுக்கும் உரிமை. அதை பரித்ததுதான் பூனா ஒப்பந்தம். சாக்கிய மக்கள் மட்டும் ஒட்டு போட்டு பிரதி நிதிகளை அனுப்பினால் அவர்கள் சாக்கிய மக்களின் உரிமைகளுக்காக பேசுவார்கள். அவர்கள் பெரும்பான்மையான ஜாதி தமிழர்களின் பிரதிநிதிகளாக இருக்கும்போது சாக்கிய மக்களின் பிரச்சனைகளை பேசமாட்டார்கள் என்றே அண்ணலும் தாத்தாவும் தனி தொகுதி (செபரேட் எலக்டரெட்) கேட்டார்கள்.
No comments:
Post a Comment