தருமபுரியில் வீடு கொளுத்திய கொள்ளை அடித்த சேரியை சூறை ஆடிய குற்றவாளிகள் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஏதோ மாவீரகள் போலவும் பிரபாகனின் தம்பிகள் போலவும் உண்மை தமிழர்கள் போலவும் பீற்றிகொண்டு வளம் வருகிறார்கள். இது தான் தமிழ் கலாச்சாரம் மீசையை முறிக்கிக்கொண்டு வெட்டருவா எடுப்பதும், தீப்பந்தம் எடுப்பதும், துப்பாக்கி தூக்குவதும் தான் அவர்களது கலாச்சாரம் இதை தான் இலங்கை அரசுக்கும் குடி மக்களுக்கும் எதிராகவும் அவர்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக செய்து கொண்டு இருந்தார்கள். இன்று உலகம் மாறி உள்ளது. அறிவாயுதமும் ஜன நாயகமும் அரசியல் சட்டமும் மக்கள் சக்தியாக கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இனியும் வன்முறை, வேல்கம்பு, வெட்டருவா, தீப்பந்தம், துப்பாக்கி என்று பேசிக்கொண்டு இருக்க முடியாது. நாம் மக்களை சிந்திக்க தூண்ட வேண்டும், அரசியல் களமாக எழுச்சி பெற வைக்க வேண்டும். வன்முறையால் ஆயுதத்தால் புகுத்தப்படும் கம்யுனிசம் வீழும் என்று அன்றே அண்ணல் சொன்னார் அது ரஷியாவில் நடந்தது. மக்களை மனிதர்களாக மாறும் கொள்கையும் கோட்பாடுமே சமூகத்தில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும். அடிக்கு அடி கதிக்கு கத்தி வான்முறைக்கு வான் முறை என்பது நாகரீக மற்ற செயல். குற்றவாளிகளை கூட மனிதர்களாக மதித்து அவர்கள் குற்றத்தை புரிந்து கொள்ள சந்தர்ப்பம் கொடுத்து அவர்களை மாற்றும் வல்லமை மனித நேயத்துக்கு உண்டு. நாம் மனிதர்கள் அதுவும் நாகரீக காலத்தில் வாழும் மனிதர்கள் இன்று உலகம் மாறிக்கொண்டு இருக்கிறது. அரசும் சட்டமும் குடி மக்களை காக்கவே. அரசும் சட்டமும் தன கடமையை செய்ய தவறும் பொது அந்த அரசையும் சட்டத்தையும் நாம் கையில் எடுக்க வேண்டுமே ஒழிய வன்முறையை அல்ல. தருமபுரியில் நடந்த வான்முறைக்காக குற்றவாளிகள், போலீஸ், சட்டத்துறை, அரசு வெட்கப்பட வேண்டும் பாதிக்கப்பட்ட குடிமக்கள் அல்ல.
No comments:
Post a Comment