வி சி க வில் இருக்கும் சாதாரண தொண்டனுக்கு கூட தெரிகிறது தர்மபுரி வன்கொடுமைக்கு காரணம் வன்னியர்களின் ஜாதி வெறியும் ஆணாதிக்க மனோ நிலையம் என்பது. வன்னியர் சமூகத்து பெண்கள் பறையர் சமூகத்து பையன்களுடன் ஓடி வீடுகிறார்கள் என்பதை தாங்க முடியாமலும் அதை எதிர்க்க முடியாமல் தடுக்க முடியாமல் விரக்தியால் இருந்த வன்னிய ஜாதி வெறியர்களின் வெறியாட்டமே தர்மபுரி சம்பவம். இதை தான் வி சி க கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும் சொல்கிறார் அந்த கட்சியில் உள்ள பெரும்பாலான தொண்டர்களும் சொல்கிறார்கள். ராமதாசு காடுவெட்டி உட்பட பாமக கட்சியினரும் பெரும்பான்மையான வன்னிய மக்களும் இந்த வன்முறைக்கு காரணம் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜாதி மறுப்பு காதல் திருமணங்களே என்கின்றனர். பறையர்கள் இன்று படித்து பட்டம் பெற்று வேலை வெட்டியை தேடிக்கொண்டு பொருளாதார மேம்பாட்டுடன் வாழ்வதால் கவரப்பட்டு வன்னிய பெண்கள் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றும், வன்னிய பெண்கள் பறையர் ஆண்களை திருமணம் செய்து கொள்வதால் தனக்கு திருமணம் செய்து கொள்ள தனது சமூகத்தில் பெண்கள் கிடைக்காமல்; கேட்கும் அளவுக்கு வரதட்சணை கிடைக்காமல் விரக்தியில் வாடும் வன்னியர்கள் பறையர்களின் பொருளாதார மேம்பாட்டை பொறுக்காமல் திட்டமிட்டு நடத்திய வன்கொடுமையே இது என்று பறையர் சமூக மக்களும். ஜாதியை விட்டு வேறு சமூகத்தில் திருமணம் செய்து கொளவதால் தங்களது சமூகம் பாதிக்கப்படுகிறது. அப்படி கல்யாணம் செய்து கொள்ளும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். அந்த பெண்ணின் குடும்பம் பாதிக்கபடுகிறது. அதனால் விரக்தி அடைந்த வன்னிய மக்களே இந்த வன்முறையில் இறங்கினார்கள் என்று வன்னிய மக்களும் சொல்லி வருகின்றனர். கலப்பு திருமணத்தால் வன்னிய சமூக பெண்கள் பாதிக்கப்படுகின்றன என்று வன்னிய பிரதிநிதிகள் தலைவர்கள் சொல்லுவது அவர்களது கருத்துரிமை. ஒவ்வொரு சமூகமும் தங்களது சமூக நலனுக்கு எது அவசியம் என்பதை ஆராய்ந்து அதை பின்பற்றுவது பிரச்சாரம் செய்வது இயல்பு. ஆனால், வெட்டுவோம், குத்துவோம் என்று மேடைகளில் பேசுவது வன்முறையை தூண்டுவதையும், வன்முறையில் ஈடுபடுவதையும், கொலை செய்வதையும், தற்கொலையை தூண்டுவதையும், வீடுகளை கொளுத்துவதையும், கொள்ளை அடிப்பதையும், தலித் மக்களை குடிகார்கள், பொம்பளை பொறுக்கிகள், திட்டமிட்டு பெண்களை ஏமாற்றும் பேர்வழிகள், தலித் மக்களால் வன்னிய பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அறிக்கை வெளியிட்டு அவமதிப்பதையும் அவதூறுகளை தூண்டி விடுவதையும் தலித் மக்கள் வன்மையாக கண்டித்தும் எதிர்த்தும் வருகின்றனர். ஆனால், நம்ம அண்ணன் திருமா மட்டும் இந்த வன்கொடுமைக்கு ஜாதி வெறியாட்டத்துக்கு புது விளக்கம் கொடுத்து கொண்டு இருக்கிறார். அவர் எந்த உலகத்தில் இருக்கிறார் என்று தான் நமக்கு குழப்பமாக இருக்கிறது. திருமா சொல்கிறார், "ஈழ தமிழர்களுக்காக இப்போதுதான் எல்லோரும் ஒன்று சேர்ந்து வருகிற நிலை. திமுகவும் லண்டன் மாநாட்டில் பங்கேற்கும் அளவிற்கு வெளியே வந்து இருக்கிறது. காங்கிரசு கூட்டணியில் இருந்தாலும் டெசோ அமைப்பு மாநாட்டை நாங்கள் நடத்துவோம் என்று துணிந்து முடிவு எடுத்து இருக்கிறது. பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் ஈழம் தான் தீர்வு என்று திராவிட முன்னேற்ற கழகம் அழுத்தமாக சொல்ல முன் வந்து இருக்கிறது. இந்த நிலையில் சாதி வெறியை தூண்டி விட்டு கலவரத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள். தமிழ் ஈழத்திற்கு எதிரானது இது. ஈழ ஆதரவு சக்திகளை இணைப்பதை தடுக்கிற வேலை இது. தமிழ் ஈழம் வென்று விட கூடாது, கிடைத்து விட கூடாது, தமிழர்கள் ஒன்று பட்டு விட கூடாது என்று எண்ணுபவர்களுக்கு துணை போகிற வேலை இது." பாருங்க தர்மபுரி வன்முறைக்கு திருமா கொடுக்கும் விளக்கத்தை. தமிழர்கள் ஒற்றுமையை குலைக்க யார் வன்னியர்களை தூண்டி விடுகிறார்கள்? அந்த காலத்தில் ராமசாமி சொல்லிட்டு இருந்தது போல சூத்திரர்களுக்கு புத்தி இல்லை ஆரியர்கள் சொல்லிக்கொடுப்பதை அவர்கள் செய்கிறார்கள் என்று சொல்லாமல், கீழ்வென்மணியில் நடந்த வன்கொடுமைக்கு காரணம் கம்யுனிச பார்ப்பனர்கள் தூண்டி விட்டு கூலி உயர்வு கேட்டதின் விளைவே என்று பழியை பார்ப்பனர் மேல் போடாமல் வன்கொடுமைக்கு காரணம் நாங்களே; இதை முழுக்க முழுக்க சுய புத்தியிலே செய்தோம் என்று ராமதாஸ் காடுவெட்டி போன்றவர்களே ஒத்துக்கொள்கிறார்கள். மேலும் இந்த வன்கொடுமை நிகழ்ந்த பின்னர் கூட, கலப்பு திருமணம் தொடர்ந்து நடக்கும் எனில் வன்னிய குல பெண்கள் பாதிக்கபடும் பட்சத்தில் வன்னிய மக்கள் தொடர்ந்து தற்கொலைசெய்து கொள்வார்கள் வெட்டுவார்கள் என்று பகிரங்கமா பி பி சி யில் பேட்டி கொடுக்கிறார்கள். ஒரு பக்கம் ஜாதி வெறியை வன்முறையை தூண்டும் ராமதாஸின் பேச்சுக்கள் மறு பக்கம் "தலித்துக்களை அவமதித்த ஜாதி வெறியை வன்முறையை தூண்டும் ராமதாசை கைது செய்" என்று தலித் மக்கள் குரல் எழுப்பிக்கொண்டு இருக்கும் வேளையில்.
திருமா மட்டும் தமிழர்கள் ஒற்றுமையை குலைக்க யாரோ ஜாதி வெறியை தூண்டுகிறார்கள் என்று ராமசாமி ஸ்டைலில் பேசிக்கொண்டு இருக்கிறார். பறையர்களுக்கு நீதி கேட்டு போராடவேண்டிய வேளையில் தமிழர் நலனுக்காக ஈழம் வெல்ல கைகோர்த்து போராட வாருங்கள் என்று வன்னிய ஜாதி வெறியர்களுக்கு அழைப்பு கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.
திருமா மட்டும் தமிழர்கள் ஒற்றுமையை குலைக்க யாரோ ஜாதி வெறியை தூண்டுகிறார்கள் என்று ராமசாமி ஸ்டைலில் பேசிக்கொண்டு இருக்கிறார். பறையர்களுக்கு நீதி கேட்டு போராடவேண்டிய வேளையில் தமிழர் நலனுக்காக ஈழம் வெல்ல கைகோர்த்து போராட வாருங்கள் என்று வன்னிய ஜாதி வெறியர்களுக்கு அழைப்பு கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.
No comments:
Post a Comment