Thursday, November 29, 2012

சாக்கிய அரசியல் களம்:

சாக்கிய அரசியல் களம்: அடுத்த தேர்தலில் நாம் மூன்று தொகுதிகளை (வடக்கு, தெற்கு, மேற்கு) ஐடியல் சாக்கிய தொகுதிகளாக தேர்ந்தெடுப்போம். ஒரு பறையர் (வடக்கு), ஒரு பள்ளர் (தெற்கு), ஒரு சக்கிலியர் (மேற்கு). இவர்களை அந்த தொகுதியில் தேர்ந்தெடுக்க தேர்தலுக்கு முன்னர் நாம் சேரிகளுக்கான தனி தேர்தல் நடத்துவோம். அணைத்து கட்சிகளை சேர்ந்த சாக்கிய மக்கள் வேட்பாளர்களாக நிற்கட்டும். நாம மக்கள் மட்டும்  அவர்களுக்கு ஒட்டு போடட்டும். யார் ஜெயிக்கிறார்களோ அவர்கள் மட்டுமே அந்த தொகுதியில் தேர்தலில் நிற்க வைக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளையும் நிர்பந்த படுத்துவோம். அவர்களை எதிரத்து போட்டியாளர்களை நிறுத்தும் கட்சிகளை தலித் விரோத கட்சிகள் என்று பிரகடன படுத்துவோம். வரும் தேர்தலில் இதை மூன்று தொகுதிகளில் செய்து வெற்றி பெற்றால் அடுத்த தேர்தலில் இது போல மற்ற ரிசர்வ்  தொகுதிகளிலும் நடை முறை படுத்தலாம். சாக்கியர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளுக்கு சாக்கிய பிரதி நிதியாக இருக்க வேண்டும் எனில் சாக்கியர்களின் ஆதரவை பெற்று இருக்க வேண்டும் என்று நிர்பந்த படுத்துவோம். அப்போது தான் தேர்ந்து எடுக்கப்படும் இவர்கள் நமக்கான பிரச்சனைகளை சட்டமன்றத்திலும் பாராளு மன்றத்திலும் பேசுவார்கள். இல்லை எனில் இந்த திராவிட தமிழ் இந்திய தேசிய  அடிமைகள் நமக்கான குரல்களை எழுப்ப மாட்டார்கள். அவர்கள் தொகுதி பிரச்சனை அல்லது தமிழ் தேசிய பிரச்சனை மட்டுமே இவர்கள் மூளைகளை குடைந்து கொண்டு இருக்கும்.


No comments: