இந்த தேசத்தை விட எனது சமூகம் பெரியது என்றார் நமது அண்ணல். அவர் சமூகம் என்றது மராட்டிய சமுகத்தை அல்ல அவர் என் சமூகம் என்றது 30 கோடி மக்கள் கொண்ட சாக்கிய சமூகத்தை. அவரை போல் தேசம், இனம், மொழி, ஜாதி எனும் பற்றுகளை கடந்து 30 கோடி சாக்கிய மக்களை தன் சமூகமாக ஏற்று அம்மக்களின் நலனுக்காக பாடுபடும் தலைவர்கள் நமக்கு தேவை. திராவிடம் தமிழ் எனும் பெயரில் நமது சமூகத்தை கூறு போடும் ஜால்ராக்கள் நமக்கு தேவை இல்லை. நான் தமிழன் என்று வீட்டை கொளுத்தும் வன்னியன் தேவன் நம் சமூகம் அல்ல மொழியால், மதத்தால், நிறத்தால், நாட்டால், ஜாதியால் வேறுபட்டாலும் சேரி எனும் ஒரு குறியீட்டுக்குள் வரும் பாகிஸ்தானிய, நேபாள நாட்டில் உள்ள சாக்கிய மக்களே நம் சமூக மக்கள். தர்மபுரியில் எரிவது அவர்களுக்கு துடிக்கிறது. கரணம் இதே ஜாதி வெறியால் அங்கெ உள்ள சேரிகளும் எரிகிறது. அங்கு எரிவதை கண்டு நம்மால் ஒன்னும் செய்ய முடியாமல் துடிப்பது போலவே இங்கு எரிவதை பார்த்து ஒன்னும் செய்ய முடியாமல் அவர்கள் துடிக்கிறார்கள்.
No comments:
Post a Comment