Wednesday, November 21, 2012

சாக்கியர்கள் கொசுக்கலாம் இவுங்க சீறி பாயும் சிறுத்தை புலிகளாம். சிறுத்தை புலிகள் கடித்து கொசு அழியாது. ஆனால் சாக்கிய கொசுக்கள்  டெங்கு காய்ச்சலை (அண்ணலின் தம்மத்தை) கொண்டு வந்து சிறுத்தை புலிகள் (தமிழ் தேசியம்)  இல்லாமல் செய்துவிடும்.


நாம் (சாக்கியர்கள்)  இந்திய மக்கள் தொகையில் முப்பது கோடி அதில் இன்று அண்ணலின் வழியில் சமூக உணர்வுள்ளவர்களாக சமூக பணியில் உள்ளவர்கள் ஒரு ஒரு கோடி பேர் இருப்போம். நாம் நினைத்தால் எதுவும் சாதிக்க முடியும். நாம் முதலில் நம்மை பற்றி சிந்திப்போம். தமிழ் தேசியம் ஈழம் ஜாதி ஒழிப்பு என்று நமது எனர்ஜியை வீணாக்க வேண்டாம். ஒரு கோடி மக்கள் சக்தி என்பது சாதாரனம் அல்ல. சிதறியுள்ள நாம் நினைத்தால்  மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக முடியும். சிந்திக்க ஆரம்பிப்போம் அதை பற்றியே பேசுவோம் நமக்கான அமைப்புக்களை கட்டமைப்போம். 

No comments: