"கலப்பு திருமணம்" "ஜாதி ஒழிப்பு" எனும் பசப்பு வார்த்தைகளும் திராவிட கூட்டம் போடும் நாடகங்களும் எங்களுக்கு தேவை இல்லை; எங்களுக்கு தேவை எங்கள் உரிமைகள்; எங்களுக்கு தேவை சமூக, அரசியல், பொருளாதார, கலாச்சார தளங்களில் எங்களுக்கு சேர வேண்டிய பங்கு. ஜாதி இந்து சூத்திரர்கள எங்களிடம் அபகரித்து வைத்து உள்ள நிலங்களில் சொத்துக்களில் எங்களின் பங்கு. சூத்திரர்கள் ஆதிக்கம் செலுத்தும் கல்வி கூடங்களில் எங்கள் பங்கு. எங்கள் மக்கள் தொகைக்கு ஏற்றாற்போல மந்திரி பதவிகள் உயர் பதவிகளில் பங்கு. மதிய மாநில திட்டங்களுள் எங்கள் (25%) பங்கு. இது வரை எங்களுக்கு செலவு செய்யாமல் பல 1000 கோடி ரூபாய்களை கொள்ளை அடித்த அரசுகள் அதை எமது மக்களுக்கு திருப்பி தர எங்களோடு கை கோற்பவர்களே எங்களின் நண்பர்கள். சும்மா கலப்பு திருமணம் கத்தரிக்கா திருமணம் என்று ஏமாற்றும் கூட்டத்தை நம்ப நாங்கள் ஜால்ரா கூட்டம் அல்ல.
/////பாக்கியராசன் சே : சாக்கிய மக்கள் என்று எங்களுக்கு யாரையும் தெரியாது.. தமிழர்களை தான் தெரியும்.. தயவு செய்து உங்கள் சாக்கிய மக்கள் யாராவது இந்த மண்ணில் இருந்தால் ஒருவேளை இருந்தால் அவர்களிடம் பேசுங்கள் இங்கே உங்கள் உளறல்கள் வேண்டாம் தோழர்..///// அய்யய்யோ டுமிழர் புலி கிட்ட பேசிட்டேனா. மனுசன்னு நினச்சது என் தப்புதான். :)
நாம் தமிழர்கள் அல்ல, நாம் தமிழன் என்று தமிழர்களுடன் அடிமைகளாக உறவுகள் வைத்துக்கொள்ள தயாராக இல்லை. நமது உரிமைகளை நிலை நாட்ட அவர்களுடன் பிரிந்து தனிதத்துவத்துடன் செயல்படுவதையே நாம் விரும்புகிறோம். நமது உரிமைகளை பெற போராடுவதை விட்டு தமிழர் ஒற்றுமை சமூக ஒற்றுமை எனும் பெயர்களில் தமிழ் குடி தாங்கிகளுக்கு ஜால்ரா போடும் தலைவர்கள் நமக்கு தேவை இல்லை நமது உரிமைகளை நாம் வென்றெடுப்போம்.
////கடவுளுடைய விருப்பத்தினால் கணவன் மனைவியுடன் இணைந்துள்ளான் என்று பைபிளில் சொல்லுவது போல, கடவுளால் இணைக்கப்பட்ட எவரையும் மனிதர்கள் பிரிக்க கூடாது என்று பைபிள் சொல்லுவது போல, ஜாதி இந்துக்களும் தீண்டத்தகாதவர்களும் கடவுளின் விருப்பத்தினால் இணைக்கப்பட்டு உள்ளனர் என்று இந்துக்கள் நினைக்கலாம். தீண்டப்படாத மக்கள் இந்துக்களுடனான உறவுகளை பற்றிய இந்துக்களின் அத்தகைய கருத்துக்களை மறுக்க உறுதியுடன் உள்ளனர். அவர்கள் உடனடியாக இந்துக்களுடன் உள்ள உறவை உடைத்தெறியவும் ஒரு முழுமையான விவாகரத்து பெறவும் தீர்க்கமாக உள்ளனர். அண்ணல் அம்பேத்கர்.///////
கலப்பு திருமணம் செய்து கொள்ள பிச்சை பாத்திரம் தூக்கிக்கொண்டு ராமசாமி மாளிகைக்கு போகும் சூத்திர ஜால்ராக்களே அந்த ராமசாமி மளிகையின் ஆண்டு வருமானமும் செலவும் எவ்வளவு தெரியுமா? அவர்களுக்கு சொந்தமாக தமிழகம் முழுக்க எத்தனை ஆயிரம் கல்வி அறக்கட்டளைகள் வங்கிகள் தொழில் நிறுவனங்கள் உள்ளன என்று தெரியுமா? அதில் எல்லாம் பங்கு தாரர்கள் பயனாளிகள் யார் என்று தெரியுமா? இவர்கள் அரசு இயந்திரத்தையும் இயற்கை வளங்களையும் பயன்படுத்தி நம்மை எப்படி கொள்ளை அடித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியுமா? அதை எல்லாம் மறைக்க இவர்கள் போடும் நாடகங்கள் தான் கலப்பு திருமணம் ஜாதி ஒழிப்பு திருமணம். நல்லா தட்டுங்க ஜாதி ஒழிப்பு ஜால்ரா.
No comments:
Post a Comment