Sunday, November 25, 2012

((((Paranjothi Pandian :  சிவகாமி சாக்கியம் பேசினாலும் சர்ச் சாக்கியம். ஆராயாமல் முன்மொழியாதீர்கள். ஏற்க்கனவே அனுபவித்துக்கொண்டு இருய்க்கிறோம்.))) உண்மை பரஞ்சோதி பாண்டியன். சிவகாமி அம்மா அவர்களிடம் உள்ள உணர்வு, கடமை, நிர்வாக திறன் அனைத்தும் தெரிந்தும் ஆயிரம் ஆயிரம் சாக்கியத்தை  உள்வாங்கிய நம் மக்கள் அவரை நெருங்காமல் இருக்க காரணம்  சாக்கிய பண்பாட்டு  அரசியல் பேசாமல் ஒரு தொண்டு நிறுவனம் போல செயல்பட்டது தான். அவரும் தற்போது மாறிக்கொண்டு இருக்கிறார். சாக்கிய பண்பாட்டு அரசியலை சிவகாமி நேரடியாக பேசாவிட்டாலும் அவர் சாக்கியதுக்கு எதிராக இது வரை பேசியது இல்லை.  அவர் சாக்கியம் நேரடியாக பேசி அதை அரசியல் ஆக்க வில்லையே தவிர அதை ஒரு  தனி மனித பண்பாடாக கடை பிடித்து வருகிறார். அவர் அரசு ஊழியராக இருந்த இத்தனை ஆண்டுகளில் கரை படியாத கரமாகவே இருந்து இருக்கிறார். அவர் விளம்பர அரசியல் செய்யாததற்கு காரணம் கூட அதை செய்ய வேண்டும் எனில் தவறான வழிகளில் பணம் பெற வேண்டும் என்பதே. அவர் சர்ச் அரசியல் பேசி இருக்கிறார். சர்ச்சில் கூட நமது மக்களுக்கு எதிராக வன்கொடுமைகள் நடக்கிறது என்று பேசி இருக்கிறார். அது மட்டுமே அவர் பேசிக்கொண்டு இருக்கவில்லை. ஆயிரம்  ஆயிரம் சாக்கிய மக்களை அவர் உணர்வு பெற வைத்துள்ளார். பல நூறு ஏக்கர் நிலங்களை அவர் மீட்டு கொடுத்து இருக்கிறார். பத்திரிக்கை மூலம் திராவிட தமிழ் தேசிய அரசியலை களமாடி இருக்கிறார், ராமசாமியை அவரது ஜாதி அரசியலை தனது பத்திரிக்கையில் தைரியமாக சாடி இருக்கிறார், அரசு ஊழியராக இருந்த காலத்தில் நமக்கான பல கோப்புகளை ஆராய்ந்து நமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற்று கொடுத்து இருக்கிறார். அரசு ஊழியராக இருந்த காலத்திலேயே ஆதிக்க சக்திகளை அரசு வன்முறைகளை எதிர்த்து இருக்கிறார். அவர் நமது மக்களை சர்சுக்காகவும், ஈழத்துக்காகவும்,தமிழ் தேசியத்துக்காகவும் பயன் படுத்திக்கொண்டு இருக்கவில்லை. அவர் வருமானம் ஈட்டவும் விளம்பரம் தேடிக்கொள்ளவும் சமூக சேவை செய்ய வில்லை. அப்படி செய்ய நினைத்தால் அவர் இந்நேரம் ஒரு மந்திரி ஆகி இருப்பார். பல கோடிகளை சம்பாதித்து இருப்பார். நாளைக்கே அவர் நினைத்தால்  தி மு க அ தி மு க வில் சேர்ந்து எம் எல் ஏ  ஆகலாம் எம் பி ஆகலாம் ஆனால் அதை செய்யாமல் தலித் உணர்வோடு தலித்தியம் பேசிக்கொண்டு இருக்கிறார். இதுக்கு மேல வெளிப்படையாக நான் ஒரு சாக்கியச்சி என்று சொல்லிக்கொளும் தைரியம் உள்ளவர். ஆணாதிக்க ஜாதிய சமூகத்தில் ஆதிக்க வெறி பிடித்த ஜாதி இந்துக்களை பல ஆயிரம் ஆண்களுக்கு சமமாக நெஞ்சை நிமிர்த்தி எதிர்க்கக் கூடியவர். ஐயா கருனாநிதி அம்மா ஜெயலலிதா என்று அவர் எப்போது கெஞ்சியது இல்லை. கருனாநிதியை Mr. கருணாநிதி என்றும் ஜெயாவை Ms. ஜெயலலிதா என்றும் பொது மேடைகளில் தைரியமாக பேசக்கூடியவர். அவர் இது வரை பிரபாகரனை போற்றியது இல்லை, வன்முறையை தூண்டியது இல்லை. அண்ணல் அம்பேத்கரின் அரசியல் பொருளாதார கொள்கைகளை முழுமையாக ஏற்றவர் அதே சிந்தனை உடையவர் அவற்றை மட்டுமே இது வரை பேசிக்கொண்டு இருக்கிறார்.  சாக்கிய அமைப்புகள் நடத்தும் கூட்டங்களில் நாம் நடத்தும் பண்பாட்டு கலாச்சார வழிபாடுகளை அவர் எதிர்த்தது இல்லை. அவர் அதற்க்கு எதிரானவரும் இல்லை. தற்போது தர்மபுரி சம்பவதை அரசியல் ஆக்கவும் நமது மக்களை ஒருங்கிணைக்க வல்லமை படைத்தவர் சிவகாமி அம்மா என்பதால் நாம் அவர் தலைமை ஏற்பது அவசியம். ஒரு தலித் மகளின் தலைமையில் அரசியல் வியுகம் அமைப்போம் திராவிடத்தையும் தமிழியத்தையும் வேரறுப்போம். தற்போது பெரும்பான்மையான தலித் இயக்கங்கள்  அவரை அணுகி உள்ளன அவரது தலைமையில் தலித்  இயக்கங்கள் ஒன்று கூடி தருமபுரி சம்பவத்துக்கு எதிராக ஒருங்கிணைய உள்ளனர்.  விருப்பமுள்ள சாக்கியர்கள் சாக்கிய அமைப்புக்கள் அவரை தொடர்பு கொள்ளவும். 






No comments: