Thursday, November 29, 2012

பூனா ஒப்பந்தம் மூலம் தன் இன மக்கள் அடுத்த பத்து தலைமுறைக்கு கஷ்டப்படுவார்கள் என்று அண்ணலுக்கு தெரியும். ஆங்கிலேயர்கள் நினைத்து இருந்தால் அண்ணலை எதிர்பாக்காமல் காந்தியை காக்க அவர்கள் தீர்மானத்தை மாற்றி இருக்க முடியும். அவர்கள் அதை செய்ய வில்லை. அன்று காந்தி எனும் தனி மனிதரின் உயிர் அண்ணலின் கையில். அவர் நினைத்து இருந்தால் காந்தி செத்தா சாகட்டும் எனக்கு என் மக்களின் முன்னேற்றம் தான் முக்கியம் என்று பூனா ஒப்பந்தத்தை மறுத்து இருக்கலாம். ஆனால் அன்று அவர் கருணை, எதிரியின் உயிர் கூட முக்கியம் எனும் அந்த மகானின் அன்பு கருணை. காந்தியை காப்பாற்றியது. 


இது மிகவும் முக்கியம் பாலா. நமது இன சகோதரர்கள் பெரும்பாலும் இந்த உண்மையை அறியாமல் அண்ணன் சொன்னார் நொண்ணன் சொன்னார்ன்னு பிரபாகரனை தூக்கி தலயில் வைத்துக்கொண்டு ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். நமது மக்களின் வருங்காலத்தை பாழாக்கி கொண்டு இருக்கிறார்கள். நமது வருங்கள சமூகம் புத்தர், அசோகர், வள்ளுவர், நந்தனார், பண்டிதர் போன்ற அறநெறியும் கருணையும் மிக்க மனிதர்களாக வர வேண்டுமே ஒழிய பிரபாகரன் போல கொலை காரராக கொள்ளை கூட்ட தலைவராக ஆக கூடாது. 

No comments: